செவ்வாய், 9 செப்டம்பர், 2014

நோய்களை விரட்டும் “தங்கப் பழம் கிவி”

இயற்கையின் கொடையான கிவி பழத்தில் வைட்டமின் சி, தாதுக்கள் உட்பட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
கிவி பழத்தின் உள்புறம் பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் தங்கம் போல இருக்கும், இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடையது.
ஒரு முறை சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் அலாதி சுவை. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஆன்டி ஆக்சிடென்ட்கள், பைடோநியூட்ரியன்ட் சத்துக்கள், நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.
போலிக் ஆசிட் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது.
ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்ப்பிணிகளுக்கு தேவையான வைட்டமின்களையும் தருகிறது.
மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது.
டயட் மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும்.
கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் குடல் கேன்சர், இதய நோய்கள், முதுமையில் ஏற்படும் தோல் பாதிப்பு, சர்க்கரை நோய் தீவிரம் குறையும்.
இது மட்டுமின்றி இருமல், சளி, ஃப்ளூ காய்ச்சல், ஆஸ்துமா போன்றவற்றையும் கிவி விரட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger