வெள்ளி, 14 ஜூன், 2013

பார்வைக் வில்லை அணிபவர்களது கவனத்திற்கு

கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி போட விரும்பவதில்லை. ஏன்னா அது அவங்களோட அழகை கெடுத்து விடும் என்று நினைப்பார்கள்.
அதுக்கு பதிலா இப்ப புது டிரென்டா கான்டாக்ட் லென்ஸ் போடுறாங்க. கான்டாக்ட் லென்ஸ் போட்டா மட்டும் பத்தாது, அதை போடுறவங்க கவனமாவும் இருக்கணும். கான்டாக்ட் லென்ஸ் போடும் போது முறையா எதையும் ஃபாலோ பன்றது இல்ல. இதனால் அவங்க கண் தான் பாதிக்கப்படும். கான்டாக்ட் லென்ஸ் புதிதாக லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டியவை....
 

* உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.

* அணிவதற்கான பயிற்சியினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

* முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அணிய வேண்டும்.

* மின் விசிறியை அணைத்துவிட்டு லென்சை அணிய வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸ் காற்றில் பறக்கும் வாய்ப்பு உண்டு.

* லென்ஸ் தவறி விழுந்தாலும் கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல் இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.

* கண்ணுக்குச் சொட்டு மருந்து போடும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.

* லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger