வெள்ளி, 12 ஏப்ரல், 2013

வை பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு:ஆய்வில் அதிர்ச்சி தகவல்! .



லேப் டாப் களில் வை பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லேப்டாப்களை மடியில் வைத்து
உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

உங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்

உங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில்  முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உள்லேடுப்பதன் மூலம் கட்டாயம் உங்கள் உடலேடையை அதிகரிக்க முடியும்

வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.

முட்டை
அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரிந்தது தான். அத்தகைய முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடையும் அதிகரிக்கும்.

வெண்ணெய்
அனைவரும் வெண்ணெயை தினமும் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான். ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது

ஜூஸ்
உடல் ஆரோக்கியமாகவும், எடை அதிகரிக்கவும், சில பவுண்ட் உடலுக்கு தேவைப்படுகிறது. ஆகவே தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.

கோதுமை பாண்
தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பாண்  வாங்கும் போது, கோதுமை பாணிநை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.


ஓட்ஸ்
காலையில் சாப்பிட ஓட்ஸ் மிகவும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. அதிலும் இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் சீரான இரத்த ஓட்டம் இருப்பதோடு, உடலும் பருமனடையும்.

தயிர்
பழங்களை விட, தயிரில் 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமில்லை, குறைந்தது 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.

உருளைக்கிழங்கு
கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.  

 மருத்துவம்

By: arsath89.blogspot.com

முகப்புத்தகத்தில் ஒரு புதிய புரட்சி: சேவை மையம் அறிவிப்பு






அமெரிக்காவின் மார்க் சக்கர்பர்க் என்பவர் தன்னுடைய ஹார்வார்ட் பல்கலைக்கழக நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக முகப்புத்தகத்தை உருவாக்கினார்.

தற்போது இந்த இணையதளம் 5.1 பில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட புகழ் வாய்ந்த ஒரு சேவை நிறுவனமாக விளங்குகின்றது.

இதில் அனைத்து தகவல் தொழில்நுட்ப சேவைகளையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் ஒரு புதிய கைப்பேசியை அந்த நிறுவனம் தற்பொழுது வெளியிடவுள்ளது.

மேலும் ஒரு புதிய முயற்சியாக இணையதளத் தகவலில் தொடர்பு இல்லாத நபர்களுக்கோ, பிரபலங்களுக்கோ செய்தி அனுப்ப விரும்பினால் முகப்புத்தகம் மூலம் கட்டண சேவையில் அந்தத் தகவலை அனுப்பும் புதிய முறையையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இச்சோதனை அடிப்படையில், முதலில் 40 நாடுகளில் உள்ள முகப்புத்தகம் உபயோகிப்பாளர்களுக்கு இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான கட்டணம், செய்தி பெறும் நபரின் முக்கியத்துவம், பிரபலத்தன்மை மற்றும் அவருக்கு பெறப்படும் செய்திகளின் எண்ணிக்கையைப் பொருத்து அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இம்முறையினால், இணையதளத்தில் அன்னியர்கள் ஊடுருவுவது நீங்கும் என்றும் இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

  கணனியின் பயன் பரந்துபட்டுக் காணப்பட்ட போதிலும் அதனூடாக பல எதிர்விளைவுகளும் ஏற்படாமலில்லை. இவற்றில் ஒன்று தான் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் போன்றன கணனியை வந்தடைதல் ஆகும்.

இவ்வகையான சம்பவங்கள் இணையப் பாவனையின் போது அதிகளவில் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறு கணனிப் பாவனையாளர்களை அறியாமல் அவர்களது கணனியில் சேமிக்கப்பட்டுள்ள வயதுக்கட்டுப்பாடுடைய (ஆபாசமான) வீடியோ கோப்புக்கள் மற்றும் புகைப்படங்களை ஸ்கான் மூலமாக கண்டறிந்து அவற்றினை இலகுவாக நீக்குவதற்கு Media Detective எனும் மென்பொருள் உதவுகின்றது.

எனினும் இம்மென்பொருளானது குறித்த கோப்பு வகைகள், அவற்றின் பெயர்கள், போன்றவற்றின் அடிப்படையிலேயே இச்செயன்முறையை மேற்கொள்ளுகின்றது.

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger