செவ்வாய், 9 ஜூலை, 2013

அளவோடு குடித்து கட்டுப்பாட்டுடன் இருக்க துணைபுரியும் கடிகாரம்! (breathalyzer watch

பொதுவாக குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச்செல்வது பேராபத்தை ஏற்படுத்தும். அதை தடுக்க போலீசார் ப்ரீத் அனலைசர் என்னும் கருவியை கொண்டுதான் கார் டிரைவர்கள் குடி போதையில் இருக்கிறார்களா? என சோதனை போட்டு அபராதம் விதிக்கிறார்கள். இந்த ப்ரீத் அனலைசர் கருவி மூலம் மது அருந்தியவரை துல்லியமாக கண்டிபிடிக்க முடியுமா?
பொதுவாக மது அருந்தியவரின் ரத்த ஓட்டத்தில் ஆல்கஹால் இலகுவாக கலந்துவிடுகிறது. ரத்த ஓட்டத்தில் கலந்த ஆல்கஹால் நுரையீரலில் இருக்கும் ஆல்வியோலை என்ற நுண் துவாரங்கள் வழியாக ஆவியாகி கரியமில வாயுவுடன் சேர்ந்து சுவாசம் மூலம் வெளியேறும். இதுபோன்று சுவாசத்தில் ஆவியாக வெளியேறும் ஆல்கஹால் அளவை வைத்தே ஒருவர் எவ்வளவு குடித்துள்ளார் என்பதை மிகத் துல்லியமாக கணக்கிட்டு கூறிவிடுகிறது ப்ரீத் அனலைசர் கருவி.
அதே சமயம், போதிய அளவு காற்றை ஊதினால்தான் இந்த கருவி துல்லியமாக கணக்கிடும். இதில், சிலர் குறைந்த அளவு காற்றை ஊதிவிட்டு தப்பிக்க வழியுண்டு. இந்நிலையில் இது போன்ற அனலைசரை விடுத்து நாமே கட்டுப்பாட்டுடன் இருந்து கொண்டால் மிகவும் நல்லதாக இருக்கும் அல்லவா? இதற்காக ஜப்பான் நாட்டை சேர்ந்த டோக்கியோபிளாஷ் என்ற நிறுவனம் ஒரு பிரத்தியேக கைக்கெடிகாரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த கைக்கெடிகாரத்தின் கீழ் பகுதியில் நாம் கொஞ்சம் மூச்சு விட்டால் போதும். அதன் திரையின் வலது பக்கத்தில் ரத்தத்தில் ஆல்கஹாலின் தன்மை குறித்த 10 விதமான வித்தியாச நிலைகளை காட்டும். பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற ஒளியின் மூலம் எச்சரிக்கை செய்கிறது.

பச்சை நிறம் தோன்றினால் மிதமான நிலை. மஞ்சள் நிறம் சற்று கூடுதல். சிவப்பு நிறம் நாம் அளவுக்கு மீறிய போதையில் இருக்கிறோம் என்பதை விளக்குவதாகும். இந்த கைக்கெடிகாரத்தின் விலை 65 பவுண்ட் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger