வியாழன், 15 ஜூன், 2017

பேஸ்புக் ஊடாக ஆபாச படங்கள், காணொளிகளை பரிமாற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

பேஸ்புக் ஊடாக பரிமாற்றப்படும் ஆபாச காணொளிகள் மற்றும் படங்களை தடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக பேஸ்புக் நிறுவனத்தால் புதிய அமைப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த அமைப்பானது photo-matching technologies என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி எந்தவொரு தனிப்பட்ட நபரின் விருப்பமின்றி அவரின் மற்றும் அவரின் ஆபாசமான படமோ அல்லது காணொளியோ பேஸ்புக் ஊடாக பரிமாற்றப்பட்டால் இது தொடர்பில் அவரால் உடனடியாக பேஸ்புக் நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும். இதன்போது, குறித்த செயற்பாட்டை மேற்கொள்வதற்காக பயிற்றப்பட்ட விஷேட குழுவினால் அந்த படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பில் கண்டறிந்து விரைவாக அகற்றப்படும்.
இதேவேளை, இவ்வாறான சந்திர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெர்டர்பில் பரிசீலித்து குறித்த படங்கள் மற்றும் காணொளிகளை பரிமாற்றிய பேஸ்புக் கணக்குகளை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஆபாச படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்தால் இனங்காணப்பட்டுள்ள நிலையில், குறித்த அமைப்புக்கு அமைய அவ்வாறானவற்றை பேஸ்புக் கணக்கு ஊடாக பரிமாற்றுவதற்கு அனுமதியில்லை என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதால் மனமுடைந்த பெண் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
குடும்பப் பெண் தற் கொலை தொடர்பில் பலத்த வாதப் பிரதி வாதங்கள் சமூக வலைத் தளங்களில் எழுந்திருந்தன. இச் சூழலில் இக் கருத்தை பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger