வியாழன், 15 ஜூன், 2017

இனி ஸ்மார்ட்போனை தொட்டாலே ஜார்ஜ் ஏறும் கவலை இல்லை

நேர்த்தியான தொழில்நுட்பங்களுடன் ஸ்மார்ட்போனை தொட்டாலே ஜார்ஜ் ஏறும்படி விரல்களை சார்ஜராக மாற்றியுள்ளனர் விஞ்ஞானிகள்.
ஸ்மார்ட்போனில் பெரிய பிரச்னை என்னவென்றால் சார்ஜ் தீர்ந்துவிடுவது தான்.
எவ்வளவு தான் விலையுயர்ந்த போனாக இருந்தாலும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்றளவும் இந்த பிரச்னை நீடிக்கிறது. இதனை முறியடிக்கும் நோக்கில் பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆர்கானிக் பாலிமரானால் ஆன செல்போனை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆர்கானிக் பாலிமரால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் திரையை தொட்டால் சார்ஜ்  வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மழைத்துளி திரையில் விழும்போது அதனை மின்சாரமாக்கி பேட்டரி தானாக சார்ஜ் ஏறும்படி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஸ்மார்ட்போன்களில் உள்ள வயர்லெஸ் சென்சார்கள் இத்தகைய தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது தானாக சார்ஜ் ஏறி விடுகிறது. அயனுக்குரிய டையோடு பேட்டரியில் பொருத்தபட்டுள்ளதால் பேட்டரிக்கு மைக்ரோவாட்ஸ் மின்சாரம் கிடைக்க பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger