வியாழன், 11 ஜூலை, 2013

உங்கள் படங்களிலிருந்து பின்னணிகளை இலகுவாய் நீக்குங்கள்

ஒரு புகைப்படத்திலிருந்து அதன் பின்னணியினை photoshop போன்ற படத்தொகுப்பானினை கொண்டு நீக்குதல் மிகவும் நேரமெடுக்கும் ஒரு காரியமாகும். இதனை ஒரே சொடுக்கில் இலகுவாக செய்வதெற்கென வந்துள்ளது
Clipping Magic எனப்படும் ஒரு இலவச இணைய மென்பொருள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் படத்தின் பின்னணியை ஒரு நிறத்திலும், வெட்டி எடுக்க தேவையான பகுதியை ஒரு நிறத்திலும், நிறம் கொடுத்து விடவேண்டியதுதான். இந்த இணைய மென்பொருள் மிகுதி வேலையினை பார்த்துக் கொள்ளும்.

அவர்களது இணையத்தளத்தில் உங்கள் படத்தினை தரவேற்றிய பின்னர், அங்கே தரப்படும் சிவப்பு நிறத்தினால் புகைப்படத்தில் உங்களுக்கு தேவையில்லாத பின்னணியினையும், பச்சை நிறத்தினால் உங்களுக்கு தேவையான பகுதியினையும் நிறம் கொடுக்க வேண்டியதுதான். உடனடியாகவே மாற்றங்களை வலது புறத்தில் நீங்கள் காணமுடியும்

உபயோகித்து பாருங்கள் : www.clippingmagic.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger