வியாழன், 11 ஜூலை, 2013

குறைந்த விலையில் ஐபோன்களை வெளியிடவுள்ள அப்பிள் நிறுவனம்

மத்திய தர மற்றும் மூன்றாந்தர சந்தைகளை குறிவைத்து அப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன்களை வெளியிடவுள்ளதாக நீண்டநாட்களாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இன்று, நேற்றல்ல அப்பிள் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் உயிரிழப்பதற்கு முன்னரே குறைந்த விலையில் ஐபோன் தொடர்பில் தகவல் கசிந்திருந்தது.
எனினும் ஸ்டீவ் அதனை கடுமையாக எதிர்த்திருந்தார், குறைந்த விலை ஐபோன் என்ற பேச்சுக்கே இடமில்லையென அவர் தெரிவித்திருந்தார். அவர் உயிரிழந்து பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் குறைந்த விலை ஐபோன் தொடர்பிலான பேச்சுக்கள் அடிபடத்தொடங்கியுள்ளன.

இணையத்தில் குறைந்த விலை ஐபோனினுடையது எனக் கூறப்படும் படங்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றன.தற்போது வெளியாகியுள்ள சில படங்கள் குறைந்த விலை ஐபோனினுடையது என அடித்துக் கூறப்படுகின்றது. இந்நிலையில் செம்சுங்கின் கெலக்ஸி நோட் 3 பெப்லட் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெலக்ஸி நோட் 3 ஆனது 5.7 அங்குல சுப்பர் எமொலெட் திரை, 3 ஜி.பி. ரெம், 13 மெகாபிக்ஸல் ஆகியவற்றையும் கொண்டிருக்குமெனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கெலக்ஸி நோட் 3னுடையது எனக் கூறப்படும் படமொன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger