திங்கள், 13 மே, 2013

இதுவரையில் தங்கத்தாலான வெளி உடலமைப்பினைக் கொண்ட அப்பிளின் ஐ போன்கள் மற்றும் அன்ரோயிட் ஸ்மார்ட் போன்கள் ஆகிவற்றினை பார்த்திருப்பீர்கள்.ஆனால் முதன் முறையாக 24 கரட் தங்க முலாம் பூசப்பட்ட வெளி உடலமைப்பினைக் கொண்ட உலகின் முதலாவது BlackBerry கைப்பேசி உருவாக்கப்பட்டுள்ளது.

 
BlackBerry Q10 எனப்படும் இக்கைப்பேசியானது QWERTY கீபோர்ட் வசதியினையும் கொண்டுள்ளதுடன் 3.1 அங்குல அளவு மற்றும் 720 x 720 Pixel Resolution கொண்ட திரையினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இவற்றில் 1.5GHz வேகம் கொண்ட Processor, 2GB RAM ஆகியன இணைக்கப்பட்டுள்ளதுடன் சேமிப்பு நினைவமானது 16GB ஆக அமைந்துள்ளது.
 
இச்சேமிப்பு கொள்ளளவினை microSD கார்ட்களின் உதவியுடன் 64GB வரை அதிகரிக்கும் வசதியும் இக்கைப்பேசியில் தரப்பட்டுள்ளது.
 
இவற்றுடன் 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 3 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.இவற்றின் பெறுமதியானது 1,597 யூரோக்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger