வியாழன், 1 ஜூன், 2017

இணைய திருடர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள்

சமூக வலைதளங்களிலிருந்து ஆரம்பித்து, இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்குதல், விற்றல் மற்றும் வங்கி சேவை வரை அனைத்திற்கும் இணைய சேவைகளை பயன்படுத்தி வருகின்றோம்.
இவை அனைத்திற்கும் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டு பயனர் பெயர் எனப்படும் கணக்கு குறியீடுகளைத்தான் பயன்படுத்துகின்றோம்.

இது போன்ற சேவைகளில் அதிகப்படியான தனிப்பட்ட தகவல்களையும் பதிவு செய்கின்றோம். இவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பது நமக்கு தேவையில்லாத தலைவலிகளை தவிர்க்க உதவும்.
இங்கு உங்களது இணையக் கணக்குகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள சில எளிய வழிகளை தான் தொகுத்திருக்கின்றோம்.
வழி முறை – 01
அதிக கடினமான மற்றும் நீண்ட கடவுச்சொல், இணையத் திருடர்களுக்கு மட்டுமில்லை வேறு யாராலும் உய்தறிய முடியாது.
கடவுச்சொல்லை தெரிவுசெய்யும் போது உங்களது குழந்கைளின் பெயர், பிறந்த திகதி மற்றும் இதர தனிப்பட்ட தகவல்களை சேர்க்கக் கூடாது.
நீண்ட கடவுச்சொல்லில் அதிக வார்த்தைகள், இடையில் எண் போன்றவற்றை பயன்படுத்தினால் உங்களது கடவுச்சொல் உங்களை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கும்.
வழி முறை –  02
பல தரப்பட்ட இணையத் தளங்களிலும் ஒரே கடவுச்சொல் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
வெவ்வேறு கடவுச்சொற்களை நினைவில் வைத்துக் கொள்ள இணைய சேவைகளையோ அல்லது உங்களது தனிப்பட்ட குறிப்பேடுகளில் குறித்து வைத்து கொள்ளலாம்.
வழி முறை –  03
சீரான இடைவெளியில் உங்களது கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றுவது நல்லது.
நீண்ட நாள் ஒரே கடவுச்சொல்லினை பயன்படுத்துவது உங்கள் தரவுகளுக்கு ஆபத்தாகும்.
ஒரு முறை பயன்படுத்திய அல்லது பழைய கடவுச்சொற்களை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது
வழி முறை – 04
இரண்டாவது, கடவுச்சொல் பயன்படுத்துவது ஆகும். பொதுவாக இது போன்ற கடவுச்சொல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து உங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பப்படும்.
இவ்வாறு செயற்படும் போது இணையத் திருடர்களினால் உங்களது தொலைபேசியில்லாமல் குறிப்பிட்ட சேவையை பயன்படுத்துவது கடினமாகி விடும்.
வழி முறை – 05
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத சேவைகளின் கணக்குகளை அழித்தல் அல்லது கணக்குகளை இல்லாது செய்வது நல்லது.
பயன்படுத்தாத கணக்குகளை விற்பனை செய்வதை பல இணையத்திருடர்கள் பொழுதுபோக்காக செய்து வருகின்றனர்.
நீங்கள் பயன்படுத்தாத கணக்குளை உங்கள் அமைப்பினுள் சென்று அக் கணக்கிற்குரிய கடவுச் சொல்லை பயன்படுத்தி இல்லாது செய்வது சிறந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger