புதன், 18 மே, 2016

‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!

தற்போது பழைய WhatsAppஐ மேம்படுத்திக் கொண்டு உங்களது WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மாற்றுங்கள் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
இணையத்தில் தகவல்களை திருடும் ஹேக்கர்கள் பல முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது அவர்கள்‘WhatsApp Gold’ என்னும் முறை மூலம் WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ’WhatsApp Gold’ தற்போது அனைராலும் பயன்படுத்த முடியும் என்ற தகவலோடு ஒரு மெசேஜ் WhatsAppல் வேகமாக பரவி வருகிறது.
உங்களது WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மேம்படுத்திக் கொள்ள ஒரு இணையத்தளமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளம் செயல்படவில்லை.
இதனால் இது WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்களின் திருடும் முயற்சியாக கருதப்படுகிறது. எனவே உங்களது நண்பர்களும் உங்களுக்கு இந்த மெசேஜை அனுப்பினால் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger