வெள்ளி, 13 மே, 2016

வின்டோஸ், மக்குக்கு டெக்ஸ்டொப் செயலிகளை அறிமுகப்படுத்திய வட்ஸ்அப்



சமூகவலைத்தள ஜாம்பவானான பேஸ்புக்கினால் ஆளப்படும், ஒரு பில்லியனுக்கு அதிகமான இயங்குநிலைப் பயனர்களைக் கொண்டுள்ள தகவல் பரிமாற்றச் செயலியான வட்ஸ்அப்பானது, அப்பிளின் கணினிகளுக்கு இயங்குதளமான மக்குக்கும் மைக்ரோசொப்ட்டின் இயங்குதளமான வின்டோஸிலலும் இயங்கக்கூடிய டெக்ஸ்டொப் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

வட்ஸ்அப்பின் முதலாவது இணைய செயலி வெளியாகி 15 மாதங்களின் பின்னரே முன்னர் கூறப்பட்ட வெளியீடு வந்துள்ளது.
ஏற்கெனவே இணைய உலாவிகளில் வட்ஸ்அப்பை பயன்படுத்துவோருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மென்பொருள், பாரியளவு வித்தியாசத்தை வழங்கப்போவதில்லை.
உங்களது அலைபேசியின் நீட்சியே தமது டெக்ஸ்டொப் செயலி என அறிவிப்பொன்றில் வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதாவது, உங்களது அலைபேசியில் இருக்கும் அனைத்து தகவல்களும் டெக்ஸ்டொப் செயலியில் ஒத்திசைக்கப்படவுள்ளது.
புதிய டெக்ஸ்டொப் செயலியானது வின்டோஸ் 8 மற்றும் அதற்குப் பிந்திய இயங்குதளங்களிலும் அப்பிளின் இயங்குதளமான மக்கின் 10.9 மற்றும் அதற்குப் பிந்தைய இயங்குதளங்களிலும் செயற்படும்.
https://www.whatsapp.com/download என்ற இணைய முகவரிக்கு விஜயம் செய்வதன் மூலம் டெக்ஸ்டொப் செயலியைத் தரவிறக்க முடியும் என்பதுடன், தரவிறக்கிய பின்னர், செயலியை திறந்து, உங்கள் அலைபேசியிலுள்ள வட்ஸ்அப் செயலியால் QR codeஐ ஸ்‌கான் செய்வதன் மூலம் டெஸ்க்டொப் செயலியை செயற்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தியா, பிரேஸில், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படும் அதிகரித்த திறன்பேசிச் சந்தை காரணமாக இந்த நாடுகளில் வெற்றியடைந்துள்ள வட்ஸ்அப், தமது பணிகளுக்காக வட்ஸ்அப்பை நம்பியுள்ளவர்களுக்கு புதிய டெக்ஸ்டொப் வசதி கைகொடுப்பதன் காரணமாக ஐமெசஞ்சர், வீசட், ஸ்கைப் ஆகிய ஏனைய தகவல் பரிமாற்றச் சேவைகளுடன் போட்டியிட முடியும்.
தனது வழமையான 99 சத ஐக்கிய அமெரிக்க டொலர் வருடாந்த சந்தாப் பணத்தை நீக்கிய பின்னர், நிறுவனங்கள், வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்ளும் B2C கணக்குகளை, தனது புதிய வருமான வழிக்காக வட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger