செவ்வாய், 4 நவம்பர், 2014

வாட்ஸ் அப்பில் இலவச அழைப்புகள்: 2015 ஆம் ஆண்டில் அறிமுகம்

வாட்ஸ் அப்பில், இலவசமாகப் பேசும் வசதியை வரும் 2015 ஆம் ஆண்டில் அந் நிறுவனம் அறிமுகப் படு த்த உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு அடுத்து உலக அளவில் பிரபலமாக உள்ள ‘வாட்ஸ்–அப்’ புதிய அம்சங்களுடன் வரும் 2015 ஆம், ஆண்டு வெளியாக இருக்கின்றது.

இதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 2015ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வாட்ஸ் அப்பில் இலவச கால் சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் சில முக்கிய அம்சங்களுடன் வாட்ஸ்-அப் 4.5.5 என்ற பதிப்பில் அடுத்த ஆண்டு வாட்ஸ் அப் வெளியாக இருக்கிறது. ஆனால் வாட்ஸ் அப்பின் புதிய இலவச வாய்ஸ் கால் சேவைக்கு செல்போன் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்தகைய சேவை அளிக்கப்பட்டால் செல்போன் நிறுவனங்களின் வருமானம் வெகுவாகப் பாதிக்கும் என்பதால் இந்த சேவையை ஆரம்பிக்க கூடாது என செல்போன் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கு முன்னர் சீனாவின் விசாட், கொரியாவின் காகோடாக், இஸ்ரேலின் வைபர் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் கால் சேவையை அளித்து வருவதால் அந்தந்த நாடுகளில் உள்ள செல்போன் சேவை நிறுவனங்கள் கடும் பாதிப்பு அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger