ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

யாகூ அறிமுகப்படுத்தும் புதிய டுல்பார்.

இணைய உலாவிகளுக்கான டுல்பார்கள் மிகப்பிரபலமாக இருந்த காலம் ஒன்று உண்டு. Internet Explorer பதிப்பு 6 அல்லது 7 இனைப்பயன்படுத்தியவர்களுக்கு இது பெரும்பாலும் தெரியும்.


ஆனால் யாகூ நிறுவனம் அதிரடியாக ஒரு புதிய டுல்பாரினை நேற்று வெளியிட்டிருக்கின்றது. இதனை நீங்கள் Internet Explorer, Firefox மற்றும் குரோம் இணைய உலாவிகளில் நிறுவிக்கொள்ள முடியும்.

செய்திகளை உடனுக்குடன் அறியவும், இணையத்தேடல்கள் செய்யவும், காலநிலை மாற்றங்கள் போன்றவற்றை இலகுவாக தெரிந்து கொள்ளவும், வேஸ்புக் மற்றும் ருவிற்றரினை அணுகவும் என பல வசதிகளோடு இந்த டுல்பார் வெளியிடப்பட்டுள்ளதாக யாகூ அறிவித்துள்ளது.


அனேகமான பிரபல இணையத்தளங்கள் தங்களுக்கென்று ஒரு டுல்பாரினை வைத்திருக்கும். நீங்கள் அதனை உங்கள் இணைய உலாவியில் நிறுவிக் கொள்ளலாம். ஆனால் காலப்போக்கில், இந்த டுல்பார்கள் தந்த வசதிகளை விட இயல்பாகவே இணைய உலாவிகள் சிறப்பான வசதிகளுடன் வெளிவந்ததும் இவை தேவையற்றுப் போகத் தொடங்கின. தற்பொழுது டுல்பார்களை தங்கள் உலாவியல் நிறுவி வைத்திருப்பவர்கள் எவருமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவை வழக்கில் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger