சனி, 3 ஆகஸ்ட், 2013

கரப்பான் பூச்சியை ஒழிப்பதற்கான வழிகள்!!!

ஊருக்கு சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்ததும், அச்சமுறுத்தும் வகையில் கரப்பான் பூச்சி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும். இதைப் பார்க்கும் போது, மனதில் எரிச்சல் ஏற்படுவதுடன், அந்த கரப்பான் பூச்சி மட்டும் கையில் கிடைத்தால், அதனை துண்டு துண்டாக வெட்டி கொன்றுவிடுவேன் என்ற வகையில் மனதில் ஆத்திரமானது ஏற்படும்.
அத்தகைய கரப்பான் பூச்சியைக் கொல்வதற்கு கடைகளில் பல பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைத்தாலும், அதனை பயன்படுத்துவதற்கு ஒருவித அச்சம் மனதில் இருக்கும். அதிலும் குழந்தைகள் வீட்டில் இருந்தால், சொல்லவே வேண்டாம். ஏனெனில் இத்தகைய பூச்சிக்கொல்லி மருந்துகள் தெரியாமல் வயிற்றில் சென்றாலும், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ஆகவே அந்த அச்சுறுத்தும் கரப்பான் பூச்சியை இயற்கை முறையில் எப்படி விரட்டுவது என்று யோசிப்போம். அத்தகையவர்களுக்காக, தமிழ் போல்டு ஸ்கை, எளிமையான சில இயற்கை முறைகளை கொண்டு கரப்பான் பூச்சியை எப்படி விரட்டுவது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி வந்தால், நிச்சயம் கரப்பான் பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.



வெள்ளரிக்காய்

கரப்பான் பூச்சித் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டுமெனில், வெள்ளரிக்காயை பயன்படுத்தினால் வராமல் தடுக்கலாம். அதற்கு வெள்ளரிக்காயின் தோலை, ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு வைத்தால், அதிலிருந்து வெளிவரும் நாற்றத்தினால், கரப்பான் பூச்சிகள் வருவதை நிரந்தரமாக தடுக்கலாம்.


பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை நல்ல பூச்சி விரட்டியாக செயல்படும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தூவினால், இனிப்புக்காக வரும் கரப்பான் பூச்சிகள் சர்க்கரையுடன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து சாப்பிடுவதால், இறந்துவிடும்.


பிரியாணி இலை

சமையலில் மணத்திற்காக பயன்படுத்தும் பிரியாணி இலையை பொடி செய்து, அதன் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தூவினால், பிரியாணி இலையின் மணத்திற்கு கரப்பான் பூச்சிகள் வராமல் இருப்பதோடு, அதனை சாப்பிட்டால் கரப்பான் பூச்சி இறந்துவிடும்.


அம்மோனியா மற்றும் நீர்

கரப்பான் பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமெனில், ஒரு வாளி நீரில், 2 கப் அம்மோனியாவை சேர்த்து கலந்து, பாத்திரம் கழுவும் தொட்டியைக் கழுவினால், அம்மோனியாவின் வாசத்திற்கு கரப்பான் பூச்சிகள் நிரந்தரமாக வருவதை தவிர்க்கலாம்.



மாவு

மிகச் சிறந்த கரப்பான் பூச்சி விரட்டி என்றால் அது மாவு தான். ஆம், எப்படியெனில் மாவு உருண்டையில் சிறிது போரிக் ஆசிட் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைத்தால், கரப்பான் வருவதை தவிர்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger