சனி, 3 ஆகஸ்ட், 2013

ஹெட்ஃபோன்கள் உபயோகிக்கும் 4ல் ஒருவருக்கு காது செவிடாகும் ஆபத்து

ஹெட்ஃபோன்களை அதிக ஒலியுடன் உபயோகிப்பதால் 4 பேரில் ஒருவருக்கு, காது செவிடாகும் ஆபத்து உள்ளது என நியூயார்க் நகர சுகாதார துறை (New York City Health Department) அண்மையில் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.


18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களிடையே நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில், எம்.பி 3 கேட்பதற்கு ஹெட்ஃபோன்களை (MP3 listeners) உபயோகிப்பவர்களுக்கு காது பிரச்னை வரும் ஆபத்து இரு மடங்காக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உலகளாவிய பிரச்னையாகும். எனவே, இத்தகைய ஆபத்துகள் உள்ளதால், ஹெட்ஃபோன்களின் மூலம் உரக்க ஒலிக்கும் இசை கேட்கும் விஷயத்தில், விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது என அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger