வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

கூகுள் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய இலத்திரனியல் சாதனம்!

பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது காலத்திற்கு காலம் பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றது.

இதன் அடிப்படையில் தற்போது Chromecast எனும் புத்தம் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இச்சாதனமானது மொபைல் சாதனங்களிலோ அல்லது இணையத்தளங்கள் மூலமாகவோ பார்த்து ரசிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிளிலும் பார்த்து மகிழக்கூடிய வசதியை ஏற்படுத்தித் தருகின்றது.

இதனை Netflix, YouTube, Google Play உள்ள வீடியோக்களை தொலைக்காட்சியில் இயக்குவதற்கும் செய்தவற்கும் பயன்படுத்த முடியும்.

இவற்றுடன் கூகுள் குரோம் உலாவி மூலம் பார்வையிடும் விடயங்களை தொலைக்காட்சியிலும் பார்வையிடுதவற்கு விசேட நீட்சி ஒன்றும் காணப்படுகின்றது.

35 டொலர்களே பெறுமதியான இச்சாதனத்தை கூகுள் பிளே மற்றும் அமேசான் தளங்களிலிருந்து கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger