ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

விண்டோஸ் 8 இல் டிபிராக் (defrag) செயலைக் கட்டுப்படுத்த

விண்டோஸ் சிஸ்டத்தில், ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் ஒரே சீராக ஒரே இடத்தில் எழுதப்பட மாட்டாது. டிஸ்க் பயன்பாட்டின் நாட்கள் செல்லச் செல்ல, பைல்கள் அழித்து அழித்து எழுதப்படுகையில், பைல்கள் சிதறலாக எழுதப்படும்.


இவற்றை ஒழுங்குபடுத்தி, ஒரே இடத்தில் அவை எழுதப்பட்டு அமைக்கப்படும் வழி தான் டிபிராக் ஆகும். இதனை நாமாக மேற்கொள்ளும் வகையிலேயே முன்பு வந்த விண்டோஸ் சிஸ்டங்கள் இருந்தன.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இது தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8, தானாக ட்ரைவ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில், டிபிராக் செய்திடுவதை மாறா நிலையில் கொண்டுள்ளது. நம் ஹார்ட் டிஸ்க் புதியதாக இருந்தால், ஹார்ட் டிஸ்க் சாலிட் ஸ்டேட் டிஸ்க்காக இருந்தால், ட்ரைவ்களில் மிக அதிகமாக இடம் இருந்தால், இவற்றில் டிபிராக் மேற்கொள்வது தேவையற்ற ஒன்றாகும்.

எனவே இதனை நிறுத்திவிட்டு, சில டிஸ்க்குகளை டிபிராக் செய்வதி லிருந்து விலக்கி வைப்பதும், தேவைப்படும்போது சிலவற்றில் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்வதும் சரியான செயலாகும்.

இதனை எப்படி விண்டோஸ் 8 சிஸ்டத்தில் செட் செய்திடலாம் எனப் பார்க்கலாம். கீழே தரப்பட்டுள்ள குறிப்புகள், செட்டிங்ஸ் செய்வதற்கான ஒரு வழியைக் காட்டுகிறது. வேறு சில வழிகளும் இருக்கலாம்.

1. ஸ்டார்ட் மெனுவில் defrag என்று டைப் செய்திடவும்.

2. திரையின் வலது பக்கம் “Settings” என்பதில் கிளிக் செய்திடுக.

3. திரையின் இடது பக்கம், “Settings Results for defrag” என்பதற்குக் கீழே “Defragment and optimize your drives” என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.

4. டெஸ்க்டாப்பில் “Optimize Drives” என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் “Change settings” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

5. சிறிய “Optimize Drives” என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். “Drives” என்பதை அடுத்து “Choose” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

6. மூன்றாவதாக, “Optimize Drives” என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். எந்த ட்ரைவ் தானாக டிபிராக் செய்யப்பட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். மற்றவற்றில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இதே போல, “Automatically optimize new drives” என்பதில் நம் விருப்பப்படி டிக் அடையாளத்தை அமைக்கலாம்.

7. “Ok” அல்லது “Close” மீது கிளிக் செய்து டயலாக் பாக்ஸ்களை மூடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger