திங்கள், 8 ஜூலை, 2013

மவுஸில் (Mouse) விண்டோஸ் கீ!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் புதியதாக வடிவமைத்த மவுஸில், விண்டோஸ் கீக்கான பட்டன் ஒன்றைத் தந்துள்ளது. இந்த மவுஸ் வகை Sculpt Comfort Mouse மற்றும் Sculpt Mobile Mouse என அழைக்கப்படுகின்றன.


Sculpt Mobile Mouse அனைத்து விண்டோஸ் 8 சாதனங்களுடன் வயர் இணைப்பின்றி இயங்குகிறது. இதற்கான சிறிய ட்ரைவினை, இதன் உள்ளேயே வைத்து எடுத்துச் செல்லலாம்.

இதில் தரப்பட்டுள்ள ஸ்பெஷல் பட்டனை ஒருமுறை தட்டுவதன் மூலம், உடனடியாக ஸ்டார்ட் ஸ்கிரீனைப் பெறலாம். இரண்டாவது முறை தட்டுகையில், இறுதியாகப் பயன்படுத்திய புரோகிராம் கிடைக்கிறது.

Sculpt Mobile Mouse முந்தையதைக் காட்டிலும் சற்றுப் பெரியதாக, எடை கூடுதலாக உள்ளது. புளுடூத் மூலம் சிஸ்டத்துடன் இதற்கு இணைப்பு கொடுக்கலாம்.

தொடுதலை உணர்ந்து செயல்படும் நீல வண்ண ஸ்ட்ரிப் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதனை மைக்ரோசாப்ட் விண்டோஸ் டச் டேப் (“Windows touch tab”) என அழைக்கிறது. இதன் மூலம் ஸ்டார்ட் ஸ்கிரீன் பெறுவதோடு, விரலை மவுஸ் மீது நகர்த்துவதன் மூலம், சில புரோகிராம்களில் பல செயல்பாடுகளை மேற்கொள்ள இயலும்.

Comfort Mouseல் மவுஸ் 39.95 டாலருக்கும், Sculpt மாடல் 29.95 டாலருக்கும், வரும் ஜூன் மாதம் விலையிடப்பட்டு வெளியிடப்படும்.

இவை விண்டோஸ் 8 மட்டுமின்றி, விண்டோஸ் 7 மற்றும் மேக் ஓ.எஸ். 10.4 சிஸ்டங்களிலும் செயல்படும். ஆனால், விண்டோஸ்8 ஆர்.டி. சிஸ்டத்தில் இயங்காது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger