வெள்ளி, 12 ஜூலை, 2013

தொலைபேசிகளை சார்ஜ் செய்ய இதோ மற்றுமொரு நவீன சாதனம்!

பலருக்கும் அவஸ்தை கொடுக்கும் போன் சார்ஜருக்கு பல சாதனங்கள் கண்டுபிடிக்கப் பட்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவில் கையடக்கத் தொலைபேசி சார்ஜருடன் கூடிய ஷு மற்றும் காலணிகள்
{Solepower – Power by Walking} தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் மூலம் செல்போன் மற்றும் ஐ பாட் பேட்டரிகளில் சார்ஜ் போதுமானதாக இருக்கிறதாம். இந்த காலணியின் அடிப்பாகத்தில் பேட்டரிகள் மற்றும் வயர்கள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலணியை அணிபவர் நடக்கும்போது அதில் இருந்து ஏற்படும் சக்தி மின்சாரமாக மாற்றப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.

இதன்மூலம் கையடக்கத் தொலைபேசிக, ரேடியோக்கள் மற்றும் ஐ பாட் போன்றவைகளில் சார்ஜ் ஏற்ற முடியும். ஐ பேடில் சார்ஜ் ஏற்றும் அளவு பேட்டரியில் மின்சாரம் சேமிக்க 2 1/2 மைல் தூரம் நடக்க வேண்டும். அப்போதுதான் அதற்குரிய மின்சாரம் உற்பத்தியாகும்.இதை அமெரிக்காவின் பிட்ஸ் பர்க் சந்னேஷி மெல்லன் பல்கலைக்கழக நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger