ஞாயிறு, 16 ஜூன், 2013

ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தைகளைக் கண்டறிய

தற்பொழுது ஆண்ட்ராய்ட் மொபைல்களின் பயன்பாடு நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு புதிய ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் 
  • புதிய புதிய மென்பொருள்கள், 
  • புதிய புதிய அப்ளிகேஷன்கள்(New android apps), 
  • புதிய விஸ்தரிக்கப்பட்ட கேமரா வகைகள் (Capacitive cam), 
  • அதிக மேம்படுத்தப்பட்ட பிராசசர்கள் (acta processor), 
  • அதிக நேரம் மின்சக்தியை தேக்கவல்ல பேட்டரி  (2850 mHa)வகைகள் 
  • வீடியோ, போட்டோக்கள், எழுத்துகள் (Videos, photos, texts) ஆகியவற்றை துல்லியமாகவும், தெளிவாகவும் காணும் வகையில் அதிக பிக்சல்கள் கொண்ட டச் ஸ்கிரீன்கள் (High quality pixels touch screen),
  • தண்ணீர் புகாத, தூசிகளால் பாதிப்பு ஏற்படுத்தாத மொபைல் body கள் என  என புத்தம் புதிய வசதிகள் மேன்படுத்தப்பட்டு கிடைக்கிறது. 

   இதனுடன் மேலதிக பதிய நுணுக்கங்கள் அடங்கிய வசதிகள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து,அவற்றை குறைந்த விலைக்கு  விற்பனைக்கு வெளியிடுகின்றது ஆண்ட்ராய் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள். 
இதுபோன்ற புதிய புதிய தொழில்நுட்பங்களுடன், ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களும் ஒன்றிணைந்து செயல்படும்பொழுது அந்த ஆண்ட்ராய்ட் போன் மதிப்பு மிக்கதாகிறது. ஆம்... ஆண்ட்ராய்ட் போன்களில் மிகச்சிறந்த பலமே இந்த அப்ளிகேஷன்கள்தான். 
பல இலட்சக்கணக்கான ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன்கள் கூகிள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கின்றன. அவற்றில் தமிழ் மொழிப் பயனர்களுக்கென சில ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களும் அடங்கும். அந்த வகையில் இருக்கும் தமிழ்மொழி பயனர்களுக்கான ஒரு மிகச்சிறந்த அப்ளிகேஷன் இது. அப்ளிகேஷனின் பெயர்: தமிழ் டிக்ஷனரி (Tamil Dictionary) அந்த அப்ளிகேஷன் மூலம் ஆங்கிலவார்த்தைக்கு சரியான தமிழ்வார்த்தை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். 
ஆங்கிலத்தில் நிறைய படித்திருப்போம்.. ஆங்கிலத்தில் உள்ளவற்றிற்கு சரியான பொருளை உணர்ந்திருப்போம். ஆனால்  ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ்வார்த்தை தெரியுமா என்றால் கண்டிப்பாக தெரியாது. 
உதாரணமாக Revenue Licence என்றால் அதற்கு 'ரெவின்யூ லைசென்ஸ்' என்பதாக மட்டுமே அர்த்தம் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதற்குண்டான சரியான தமிழ்ச் சொல் நமக்கு தெரியாது என்பதே உண்மை. 
இந்த அப்ளிகேஷன் மூலம் Revenue Licence என்ற இந்த வார்த்தைக்கு 'அரசு வருவாய் உத்தரவுப் பத்திரம்' என்ற அர்த்தத்தையும், தமிழ் வார்த்தையும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும். 
இவ்வாறு ஆங்கிலத்தில் பல்வேறு வார்த்தைகளுக்கு சரியான தமிழ் அர்த்தம் தெரியாமல் இருப்பவர்கள் உடனடியாக சரியான தமிழ்வார்த்தையை அறிந்துகொள்ள இந்த அப்ளிகேஷன் உதவும். ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் ஒவ்வொரு தமிழருக்கும் இந்த அப்ளிகேஷன் பயன்படும் என்றால் அது மிகையாகாது. 
தேவைப்படுபவர்கள் இந்த இணைப்பில் சென்று உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger