புதன், 19 ஜூன், 2013

கர்ப்பம் தரித்துள்ள காலத்தில் கடைபிடிக்க வேண்டியது




கர்ப்ப காலத்தில் முதலில் கடைபிடிக்க வேண்டியது சுத்தம். சாப்பிடும்போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுகி விட்டு பின்னர் சாப்பிட வேண்டும். உடலை சுத்தமுடன் வைத்துக்கொள்ள
தினமும் குளிப்பது அவசியம்.. அதிக சூடான தண்ணீரையும் அதிகக் குளிர்ந்த நீரையும் குளிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது. கர்ப்பகால இறுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு முலைகளில் ஏற்படும் சுரப்பு நீர் காய்ந்து பெருக்குகளாக முலைக்காம்பில் இருக்குமாயின் நன்கு தேய்த்து அகற்றி விடுதல் நல்லது.
 

உடல் சுத்தம் போதும் என எண்ணக்கூடாது. பல் சுத்தமும் மிக அவசியம். பற்களைப் பேணாது சொத்தையாகமாற விட்டு விட்டால் பற்களின் வேர்களில் சீழ்பிடித்து கர்ப்பக் கன்னி போன்ற இன்னல்களுக்கு ஆளாகலாம். இதனைத் தவிர்க்க காலை, இரவு இரு வேளைகளிலும் பற்களைத் துலக்க வேண்டும். சாப்பிட்டு முடித்த பின்னர் நன்கு வாய் கொப்புளித்துப் பற்களைப் பேணுதல் வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமலிருக்க கீரை வகைகளையும், கனி வகைகளையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தில் எப்போதும் போல பட்டுப்புடவைகளையும், கம்பளி வகைகளையும் அணிவது கர்ப்பிணி பெண்களுக்கு நல்லதல்ல. அதிக கனமில்லாத நூல்புடவைகள், மெல்லிய உள்ளாடைகள் ஆகியவற்றை உடுத்துவதே சிறந்தது. மிகக் குளிரில் வெளியே செல்ல வேண்டி நேர்ந்தால், மட்டுமே கம்பளி உடைகளை அணிதல் வேண்டும். `பிரா' மார்பகங்களைத் தூக்கிப் பிடிப்பவைகளாக இருக்க வேண்டுமே தவிர மார்பகங்களை இறுக்குபவைகளாக இருக்கக்கூடாது.

கையின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும், இறுக்கமான சட்டையும் அணியக் கூடாது. தொப்புளைச் சுற்றி உள் பாவாடையோ அல்லது சேலையையோ இறுக்க கட்டக் கூடாது. கர்ப்பிணிகள் மென்மையான செருப்புகளைத்தான் அணிய வேண்டும். உயர்ந்த குதிகால் செருப்பு அணிவது சுகாதாரத்திற்கு நல்லதல்ல. கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். கருவுற்றிருக்கும்போது, உதிரப்போக்கு சிறிது இருந்தாலும் முந்தைய கர்ப்பங்களின் போது கருச்சிதைவுகள், குறைப்பேறுகள் முதலியன ஏற்பட்டிருந்தாலும் உடலுறவை அறவே தவிர்க்க வேண்டும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger