ஞாயிறு, 19 மே, 2013

சூரிய சக்தியால் பறக்கும் சுவிஸ் விமானம்

பகலில் சேகரிக்கப்படும் சூரிய சக்தியைக் கொண்டு இரவிலும் விமானத்தை ஓட்டலாம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சூரிய சக்தி விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.


கடந்த 2009ம் ஆண்டு முதன் முறையாகத் தனது வெற்றிகரமான பயணத்தைத் தொடங்கிய இந்த சூரிய சக்தி விமானம், வருகின்ற மே மாதம் முதல் யூலை மாதம் வரை அமெரிக்காவின் பல நகரங்களுக்கு இடையே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபீனீக்ஸ்(Phoenix), டாலஸ்(Dallas) , வாஷிங்டன்(Washington) ஆகிய நகரங்கள் வழியாக இந்த விமானம் நியுயார்க் நகரத்துக்கு யூலை மாதம் வந்து சேரும். இதில் போஷ்பெர்குடன்(Borschberg) மற்றும் பிகார்டு(Piccard) ஆகியோர் விமானியாகப் பணிபுரிவர்.

ஒவ்வொரு ஊரிலும் பத்துநாட்கள் இவ்விமானம் பொதுமக்களின் பார்வைக்காக விமானநிலையத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் விமானிகளிடம் இந்த விமானத்தின் செயற்பாடு குறித்துப் பேசி தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு பெல்ஜியத்துக்கும், பிரான்சுக்கும் இடையே இந்த சூரிய சக்தி விமானத்தை ஓட்டினர். பின்னர் மேட் ரிடுக்கும், ராபத்துக்கும் இடையே 1550 மைல் தூரம் இந்த விமானத்தில் பறந்துள்ளனர்.

மேலும் எதிர்வரும் 2015ம் ஆண்டு இந்த விமானத்தில் உலகம் முழுக்கச் சுற்றிவரத் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger