ஞாயிறு, 19 மே, 2013

நான்கு வயதேயான சிறுவன் மேயர்

அமெரிக்காவில் நான்கு வயதேயான சிறுவன் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு
திறமையாக செயல்பட்டு அசத்துகிறான். அவனுடைய பெயர் ராபர்ட் துப்ட்ஸ்(4). மினிசோட்டா நகருக்கு அருகேயுள்ள டோர்செட் என்ற ஊர் தான் அவனுக்கு இந்த பதவியை கொடுத்து கவுரவித்துள்ளது. மேயர் ராபர்ட் இன்னும் மழலையர் பள்ளிப் படிப்பை கூட நிறைவு செய்யவில்லை. பிறகு எப்படி அவன் மேயர் ஆனான்? என்றால் குலுக்கல் முறை தேர்வு அதிர்ஷ்டத்தில் இந்த பதவி கிடைத்திருக்கிறது.
இதில் மற்றொரு விஷேச தகவல் இந்த ஊரின் மொத்தம் மக்கள் தொகை 22 பேர் மட்டுமே. மேயர் ராபர்ட் பேச்சாற்றல் மிக்கவன். அவனிடம் கேள்வி கேட்டு யாரும் மீள முடியாது. பதில் சரளமாக வரும். கையில் ‘ஸ்டிரிக்’ (கைத்தடி) பிடித்துக் கொண்டு ஊரின் வீதிகளில் வலம் சென்று குறைபாடுகளை அறிகிறான். தூண்டிலில் இரையை எப்படி வைத்து மீன் பிடிக்க வேண்டும் என்றும் யோசனை கூறுகிறான். அவனுடைய திறமையான செயல்பாட்டை ஊர்மக்கள் பாராட்டுகிறார்கள். தனக்கு சோபியா என்ற காதலி இருப்பதாகவும் ராபர்ட் கூச்சம் ஏதுமின்றி ஒப்புக்கொள்கிறான். இந்த பெண் எங்கு இருக்கிறாள்? மேயரின் இதயத்தில் எப்படி இடம் பிடித்தாள் என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger