வியாழன், 23 மே, 2013
ஆழ்கடலில் அதிசய உயிரினங்கள் - விஞ்ஞானிகள் தகவல்!
பசிபிக் பெருங்கடலின் அதிஆழமான பகுதியில் நுண்ணுயிரிகள் ஏராளமாக இருப்பதை சர்வதேச விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியான மரியானா டிரென்ச் எனப்படும் 11 கிலோமீட்டர் ஆழ் கடலில் ஏராளமான நுண்ணுயிரிகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேச்சர் ஜியோசயின்ஸ் என்கிற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள், கடலின் அடி ஆழத்தில் இருக்கும் ஓரணு உயிரிகள், கடலில் மேற்பரப்பில் இருக்கும் இதுபோன்ற ஓரணு உயிரிகளைவிட மேலதிக செயலூக்கம் பெற்று காணப்படுவதாக தெரிவிக்கிறது. இந்த நுண்ணுயிரிகள் இறந்த கடல்வாழ் தாவரங்களையும், கடலின் மேற்புறத்திலிருந்து நிலைதவறி அல்லது வழிதவறி இங்குவரும் மற்ற உயிரிகளை உண்டு உயிர்வாழ்வதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கடலில் இவ்வளவு ஆழத்தில் உயிரிகள் இருப்பது சாத்தியமில்லை என்று நினைத்திருந்த விஞ்ஞானிகளுக்கு அங்கு காணப்படும் ஏராளமான நுண்ணுயிரிகளும் அவற்றின் அதிகரித்த செயற்படு தன்மையும் பெரும் ஆச்சரியத்தை அளித்திருப்பதாக, இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
(BBC)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நண்பர்களுடன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.
உங்கள் அனைவருக்கும்
உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!
Arsath89.Blogspot.Com FB
Twitter for blogger



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக