வியாழன், 23 மே, 2013

பேஸ்புக் தளத்திலுள்ள உங்கள் கணக்கினை பாதுகாப்பாக சில வழிமுறைகள்

சமூக வலைத்தளங்களில் மிகவும் முக்கியமானதாகவும், பெரும்பாலானோர்களின் செல்லக்குட்டியாகவும் திகழும் ஃபேஸ்புக் பல சிறப்பம்சங்களை தினமும் அறிமுகப்படுத்தியவாறே உள்ளது. ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும்
இந்த ஃபேஸ்புக் சிலருக்கு நன்மைகளையும் பலருக்கு தீமைகளையுமே செய்துவருவதை உலகறியும். தீமைகளுக்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது ஹேக்கும், விஷமிகளுமே என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை ஹேக்கிலிருந்து பாதுகாக்கவும் இந்நிறுவனம் பல வழிகளிலும் முயன்று வருகிறது. யானைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போலவே இவ்வாறான நிகழ்வுகளும். நீங்களும் ஃபேஸ்புக் வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கினையும் பத்திரம்போல் பாதுகாப்பாக்கலாம். சில நச் டிப்ஸ் உங்களுக்காக....
 

கடவுச்சொல் :

ஃபேஸ்புக் பயன்படுத்துகையில் முக்கியமானதாக கருதப்படுவது கடவுச்சொல். பாஸ்வர்ட் என அழைக்கப்படும் இதை வலுவாக அமைக்கவேண்டும் என்பதே ஃபேஸ்புக்கின் முதன்மையான வேண்டுகோள். இந்த கடுவுச்சொல்லை வலுவானதாக்க குறைந்தது 6 எழுத்துக்கள் கொண்டதாகவாவது இருத்தல் சிறப்பு. அதில் !@#$%^ இம்மாதிரி குறியீடுகளையும் சேர்ப்பது பாதுகாப்பிற்கு முக்கிய வழிவகுக்கும்.

இ-மெயில்:

ஃபேஸ்புக் கணக்கிற்காக நீங்கள் பயன்படுத்தும் இ-மெயில்முகவரியை பாதுகாப்பாகவும், சிராக பயன்படுத்தியும் வருதல் நன்மைதரும். ஏனெனில் உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கின் கடவுச்சொல் தொலைந்துவிட்டால் ரெக்கவரி செய்வதற்கு இ-மெயில் முகவரியே முக்கியம் அமைச்சரே!

லாக்அவுட்:

ஃபேஸ்புக் பயன்படுத்தி முடித்தவுடன் அதை கண்டிப்பாக லாக்அவுட் செய்யவேண்டும் என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் முக்கியமான வேண்டுகோள். ஏனெனில் ஃபேஸ்புக் செஸன் என்ற முறையானது மிகவும் திறன்வாய்ந்தது. எனவே நீங்கள் உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை லாக்அவுட் செய்யவில்லை என்றால், சில மாதங்கள் கூட அது அப்படியே இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். வேறு யாராவது கூட அதை பயன்படுத்த முடியும் என்பதை மனதில் வைக்கவும்.

வைரஸ் தடுப்பான் :

நீங்கள் பயன்படுத்தும் கணினி மற்றும் லேப்டாப்புகளில் வைரஸ் தடுப்பான்களை[Antivirus] பயன்படுத்தவேண்டும்.

பாதுகாப்பு கேள்விகள்...

பாதுகாப்பு கேள்விகள்[செக்யூரிட்டி கொஸ்டீன்]]. இதில் உங்களுக்கு மிகவும் பழக்கமுள்ள கேள்விக்கு மட்டும் சரியான பதிலைத்தரவேண்டியது மிகவும் அவசியம். கடவுச்சொல் தொலைந்தாலோ அல்லது மறந்தாலோ இது பெரிதும் உதவும்.ஃபேஸ்புக்கின் மிகவும் முக்கியமான ஒன்று இந்த பாதுகாப்பு கேள்விகள்.

பாதுகாப்பான முறை:

ஃபேஸ்புக் பயன்படுத்துகையில் ஆங்காங்கே காணப்படும் கேடுகெட்ட சில லிங்க்குகளை கிளிக்செய்கையில் கவனம் தேவை. பெரும்பாலும் ஆபாச படங்களாகவே ஸ்பேம் வைரஸ்கள் பரவி உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை முடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

கடவுச்சொல் பத்திரம் :

உங்களுடைய கடவுச்சொல்லை மற்றவருக்கு தருவதையோ, தெரியும்படி பயன்படுத்துவதையோ தவிர்ப்பதே நல்லது.

உங்கள் உலாவி:

கணினிகளில் பயனடுத்தும் ப்ரௌசெர் என்ற உலவிகளை அவ்வப்பொழுது அப்டேட் செய்வதும் சாலச்சிறந்தது. இவைதான் இன்டர்நெட் பயன்பாட்டின் அடிப்படியே!

கவனமாக பயன்படுத்தினால் ஃபேஸ்புக் நன்மைகளையே தரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger