சனி, 10 டிசம்பர், 2016

இரு மடங்கு வேகம், 4 மடங்கு தூரம்: உருவாக்கப்பட்டது Bluetooth 5

வயர்லெஸ் தரவு ஊடுகடத்தல் தொழில்நுட்பத்தில் Bluetooth ஆனது பாரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தமை அறிந்ததே.
தற்போதுவரை மொபைல் சாதனங்கள் உட்பட, லேப்டொப் கணினிகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது
.
புதிய பரிமாணங்களைக் கண்டு வரும் இத் தொழில்நுட்பத்தில் தற்போது மற்றுமொரு புரட்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது Bluetooth 5 உருவாக்கப்பட்டுள்ளது.
இத் தொழில்நுட்பமானது முன்னைய Bluetooth 4 இனை விடவும் இரண்டு மடங்கு வேகம் கூடியதாக இருக்கின்றது.
மேலும் நான்கு மடங்கு தூரத்திற்கு தரவுகளைப் பரிமாற்றம் செய்யும் ஆற்றலையும் கொண்டுள்ளது.
இந்த தகவலை Bluetooth Special Interest குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இப் புதிய Bluetooth 5 தொழில்நுட்பமானது எதிர்வரும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger