வியாழன், 3 நவம்பர், 2016

கூகுளின் Android Pay வசதியினை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்!

கூகுள் நிறுவனமானது தனது தயாரிப்புக்களை பயனர்கள் ஒன்லைன் ஊடாக இலகுவாக கொள்வனவு செய்வதற்காக Android Pay எனும் சேவையினை வழங்கி வருகின்றமை தெரிந்ததே.
தற்போது குறிப்பிட்ட அளவிலான நாடுகளில் மட்டுமே பயன்பாடட்டில் காணப்படும் இச் சேவையானது ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் இச் சேவையின் ஊடாக தனது பயனர்களுக்கு மற்றுமொரு வரப்பிரசாதத்தை வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது.
இதன்படி எதிர்வரும் காலங்களில் Visa மற்றும் Mastercard என்பவற்றினைப் பயன்படுத்தி Android Pay சேவையில் பணத்தினை செலுத்த முடியும்.
இதேவேளை தற்போது Visa Checkout மற்றும் Masterpass என்பவற்றின் ஊடாக பணம் செலுத்தக்கூடிய வசதியே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கைவிரல் அடையாளத்தினை கடவுச் சொல்லாக பயன்படுத்தி இச் சேவைனை பயன்படுத்துவதனால் மிகவும் பாதுகாப்பான சேவையாக Android Pay கருதப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger