ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

பேஸ்புக்கில் ஆட்டோபிளே வீடியோவை நிறுத்துவது எப்படி?

 உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்கள் ஆட்டோமெட்டிக்காக பிளே ஆகும் வசதியை ஃபேஸ்புக் கொண்டு வந்தது.
இதற்கு பேஸ்புக் பயனாளிகள் பெரும்பாலானோர் ஆதரவு தந்தாலும் ஒருசிலர் இதை விரும்பவில்லை.
தேவைப்படும் வீடியோவை மட்டுமே பிளே செய்து பார்த்த வந்த பயனாளிக்கு இந்த வசதி அசெளகரியமாக இருந்தது.

ஸ்டெப் 1:
பேஸ்புக்கில் லாக் அவுட் ஆப்சனுக்கு சற்று மேலே உள்ள செட்டிங்ஸ்-ஐ முதலில் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2:
அதில் உள்ள டிராப் டவுன் ஆப்சனை கிளிக் செய்து பின்னர் அதில் உள்ள ஆட்டோ பிளே வீடியோவை தேர்வு செய்து அதை ஆப் செய்யுங்கள்.
மேற்கண்ட வழி கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும். இனி ஆண்ட்ராய்டு மொபைல் போனில் எப்படி டிஸேபிள் செய்வது என்று பார்ப்போம்.
ஸ்டெப் 1:
வலது மேல் பகுதியில் உள்ள செட்டிங்ஸ் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டெப் 2:
ஆப் செட்டிங்கை கண்டுபிடிக்கும் வரை ஸ்குரோல் செய்யுங்கள்.
ஸ்டெப் 3:
வீடியோ ஆட்டோ பிளே ஆப்ஷன் வந்தவுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.
ஸ்டெப் 4:
அதில் உள்ள ஆட்டோ பிளே ஆப்சனில் ஸ்டாப் என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான் இனி ஐஓஎஸ் பயனாளிகளுக்கு எப்படி என்பதை பார்ப்போம்.
ஸ்டெப் 1:
வலது மேல்புறத்தில் உள்ள செட்டிங் ஆப்சனை தேர்வு செய்யுங்கள் ஸ்டெப் 2: ஸ்குரோல் டவுன் செய்து செட்டிங்கை தேர்ந்தெடுங்கள்.
ஸ்டெப் 3:
அக்கவுண்ட் செட்டிங் சென்று அதில் உள்ள வீடியோ மற்றும் போட்டோவை தேர்வு செய்யுங்கள்.
ஸ்டெ 4: இனி ஆட்டோ ப்ளேயை அழுத்துங்கள்.
ஸ்டெப் 5: ஆட்டோ பிளே பக்கம் வந்ததும் ‘நெவர் ஆட்டோபிளே வீடியோஸ்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
இனி ஃபேஸ்புக்கில் உள்ள வீடியோ உங்களை தொந்தரவு செய்யாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger