திங்கள், 22 ஜூன், 2015

இரவு நேர விபத்துக்களை தவிர்க்க உதவும் லேசர் கருவி..!


தினந்தினம் சாலை விபத்துக்கள்தான்..! என்னதான் கவனமாக இருந்தாலும் சரி, நிதானமாக செயல்பட்டாலும் சரி சாலை விபத்துக்கள் அடங்கியதாய் தெரியவில்லை

அதற்கு சான்று, உலகில் ஒரு வருடத்திற்கு 1.3 மில்லியன் பேர் சாலை விபத்தில் உயிர் இழக்கின்றனர், 20-30 மில்லியன் பேர் சாலை விபத்துக்களில் காயமடைகின்றனர்.
பலசமயம் மோசமான வானிலைகள் விபத்துகளுக்கு காரணமாகி விடுகின்றன. அம்மாதிரியான விபத்துக்களை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பக் கருவிதான் - அன்ட்டி கொள்ளிஷன் ஃபாக் லேசர் லைட்..!

மழை, பனிமூட்டம், ஒளியின்மை போன்ற மோசமான வானிலைகளில் இந்த லேசர் லைட்டானது, பின்னால் வரும் வாகனங்கள்களை எச்சரித்து, மிகவும் நெருங்காத வண்ணமும், மோதி விடாதபடியும் பார்த்துக்கொள்ளும்.

இதில் இருந்து 15 டிகிரி கோணத்தில் மிகவும் பளிச்சிடும் லேசர் ஒளி கீற்று வெளிவருவதால், இதை குறிப்பாக இரவு நேரங்களில் எளிதில் கண்டுகொள்ள முடியும். எளிதில் வாகனத்தின் பின்புறம் பொருத்திக் கொள்ளும்படி அன்ட்டி கொள்ளிஷன் ஃபாக் லேசர் லைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger