திங்கள், 19 ஜனவரி, 2015

வெளிநாட்டு மொபைல்களுக்கு உங்களது கணினி மற்றும் லாப்டாப்களில் இருந்து இலவசமாக அழைப்புகளை மேற்கொள்வது எப்படி?

வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று உங்களுக்கு தெரியுமா. இதை மற்றவர்கள் சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம், ஆனால் நிஜத்தில் இது சாத்தியமா என்று யோசித்தே முயற்சி செய்யாமல் இருப்பீர்கள்.
 
உண்மையில் இது சாத்தியம் தான், வெளிநாட்டு மொபைல்களுக்கு உங்களது கணினி மற்றும் லாப்டாப்களில் இருந்து இலவசமாக அழைப்புகளை மேற்கொள்வது எப்படி என்று தான் இங்கு நீங்கள் பார்க்க போகின்றீர்கள். இதை மேற்கொள்ள உங்களது கணினி அல்லது லாப்டாப்களில் இன்டெர்நெட் வசதி அவசியம் தேவை, முதலில் உங்களது கணினி அல்லது லாப்டாப்களில் இன்டெர்நெட் உள்ளதா என்பதை பார்த்து கொள்ளுங்கள்.
 
 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தளங்களை பயன்படுத்த அந்தந்த தளங்களில் நீங்கள் உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நம்பர்டேன்க் ( Numbertank ) 
நம்பர்டேன்க் இமையதளம் மூலம் சுலபமாக சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இந்த தளம் மூலம் நாள் ஒன்றைக்கு 30 நிமிடங்களுக்கு மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். நம்பர்டேன்க் தளத்திற்கு செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.
கூகுள் வாய்ஸ்
 கூகுள் நிறுவனத்தின் கூகுள் வாய்ஸ் மூலம் கணினியில் இருந்து சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள சிறந்த சேவையாக இருக்கும். எனினும் அமெரிக்க காலர்களுக்கு மட்டும் தான் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.
ஐகால் 
சர்வதேச அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ள சிறந்த தளமாக ஐகால் விளங்குகின்றது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஐகால் செயளி வடிவிலும் கிடைக்கின்றது, இந்த செயளியானது ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களுக்கு கிடைக்கின்றது. ஆனால் இந்த தளம் மூலம் இலவச அழைப்புகளை நாள் ஒன்றுக்கு 5 நிமிடங்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். ஐகால் தளத்திற்கு செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.
கல்ஃப்சிப் (GULFSIP) 
சர்வதேச அழைப்புகளை கணினியில் இருந்து மொபைல்களுக்கும், கணினியில் இருந்து கணினிக்கும் மேற்கொள்ள சிறந்த தளமாக இருக்கின்றது. மேலும் இதன் மூலம் குருந்தகவல்களையும் அனுப்ப முடியும். இந்த சேவையை பயன்படுத்த இங்கு க்ளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger