புதன், 23 ஜூலை, 2014

கம்பியூட்டரின் வேகத்தை அதிகரிக்க இதுவும் ஒரு வழி

ஆரம்பத்தில் வேகமாக இயங்கிய கணணி சிறிது நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது மந்த கதியில் இயங்குகின்றதா?
இதற்கு பல காரணங்கள் இருப்பினும் பொதுவாக நாம் கணனியில் நிறுவும் மென்பொருள்கள் Start Up இல் சேர்க்கப்படுவதால் கணனியின் வேகத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்படுகின்றது.

அதாவது நீங்கள் கணனியில் நிறுவும் பெரும்பாலான மென்பொருள்கள் கணணி துவங்கும் போது அதனுடன் இணைந்தவாறு செயற்பட துவங்குகின்றது. எனவே கணணி துவங்குவதட்கே அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றது.
எனவே இது போன்ற மென்பொருள்கள் கணணி துவக்கத்தின் போது துவங்குவதனை நிறுத்திவிட்டால் உங்கள் கணனியின் வேகத்தில் முன்னேற்றத்தை காணலாம்.
● இதற்கு Run சென்று msconfig என தட்டச்சு செய்க.
● பின் திறக்கப்படும் சாளரத்தில் Startup எனும் Tab இனை சுட்டுக
● இனி அதில் கணணி துவக்கத்தில் துவங்கும் மென்பொருள்களின் பட்டியல் தரப்பட்டிருக்கும்.
● அதில் தேவையற்ற மென்பொருள்களுக்கு முன்னே இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விட்டு Apply செய்து Ok செய்க…
அவ்வளவு தான்..!
10462866_519937621472629_4751846883067921193_n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger