வெள்ளி, 2 மே, 2014

அதிக நேரம் சைக்கிள் ஓட்டினால் இதயம் பாதிக்கும்!

உலகம் முழுவதும் டாக்டர்கள் அதிகம் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளில் சைக்கிள் ஓட்டுவதும் ஒன்று. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கும், இரவில் நல்ல உறக்கத்தைத் தரும், கொழுப்பைக் குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டும்... இப்படி சைக்கிள் ஓட்டுவதில் எக்கச்சக்க நன்மைகள்.


ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சல்லவா? அப்படித்தான் ‘தினமும் அதிக நேரம் ஓடுவதும் சைக்கிள் ஓட்டுவதும் ஆபத்து’ என்று சமீபத்தில் எச்சரித்துள்ளது அமெரிக்க மருத்துவக் கழகம். ‘‘தொடர்ச்சியான சைக்கிளிங், நம் இதயத் தசைகளை பலவீனமாக்கி விடக் கூடும். இந்த உடற்பயிற்சியும் ஒரு விதத்தில் பவர்ஃபுல் மாத்திரை போன்றதுதான். அதற்கும் பக்க விளைவுகள் உண்டு’’ என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க மருத்துவக் கழகத்தின் இதய மருத்துவ நிபுணர் கார்ல் ஜே.லேவி.

‘‘இப்படிப்பட்ட கடுமையான உடற்பயிற்சிகளால் பலவீனமடையும் இதயம் வழக்கத்தை விட வேகமாகவோ, மெதுவாகவோ துடிக்கத் துவங்குகிறது. இதனை அரித்மியா என்கிறார்கள். பெரும்பாலும் ஆபத்தின்றி வந்து போகும் இந்த அரித்மியா, சில நேரங்களில் இதய செயலிழப்பிலும் கொண்டுபோய் விட்டுவிடும்’’ என்கிறார்கள் அவர்கள்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger