வியாழன், 1 மே, 2014

பத்திரிகையாளர்களுக்கு உதவ புதிய வசதியை அறிமுகம் செய்துள்ள பேஸ்புக்

முன் எப்போதும் இல்லாத வகையில் சமீபகாலமாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் செய்திகளை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிமாக உள்ளது.


பேஸ்புக், டுவிட்டர், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் கணிசமான அளவில் செய்திகள் பதிவேற்றம் செய்யப்படுவதால் பத்திரிகையாளர்களுக்கு அவை தங்கச் சுரங்கமாக மாறிவருகின்றன.
இந்நிலையில், டுவிட்டருக்கு போட்டியாக பத்திரிகையாளர்களுக்கு உதவும் வகையில் ‘எஃப்.பி. நியூஸ்வயர்’ என்ற புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதனமூலம், உலகம் முழுவதிலுமுள்ள பத்திரிகையாளர்கள் தங்கள் செய்திகளை போட்டோ மற்றும் வீடியோ வடிவில் பகிர்ந்துகொள்ள முடியும். அதோடு, செய்திகளின் ‘அப்டேட்’ களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
பெரும்பாலான பத்திரிகையாளர்கள் டுவிட்டரை பயன்படுத்தி வரும் நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் இந்த புதிய அறிமுகம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger