ஞாயிறு, 23 மார்ச், 2014

சிறு நீர் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் விஞ்ஞானிகள் தகவல்

தற்போது உலக உருண்டையில் மொத்தம் 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இதில் 100 கோடிக்க்கு அதிகமான பேர் மின்சார வசதி இல்லாமல் வாழ்கிறார்கள்.தற்போது சிறு நீரில் இருந்து மினசாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிந்து உள்ளனர்.

உலகில் ஒரு நாள் சராசரியாக உலக மக்கள் 1050 கோடி லிட்டர் சிறு நீர் கழிக்கிறார்கள். இது முழுவதும் வீணாகிறது.இந்த 1050 கோடி லிட்டர் சிறுநீரை கொண்டு ஒலிம்பிக்கில் இடம் பெறும் 4200 நீச்சல் குளங்களை நிரப்பலாம்.
இது குறித்து யாராவது நினைத்து இருப்போமா, உண்மையில் விஞ்ஞானிகள் மனித கழிவுகள் வீணாவது குறித்து ஆராய்ந்தனர்.உலக மக்கள் தொகையில் 7 பேரில் ஒருவர் அடிப்படை மின்சாரம் இல்லாமல் வாழ்கின்றனர்.
உலகில் எண்ணெய் வினியோகமமும் குறைந்து கொண்டே வருகிறது.ஆகவே விஞ்ஞானிகள் நிலையான வழிகளில் உலக மக்களுக்கு மின்சாரம் கிடைக்க புதிய வழிகளை கண்டறிந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு, இங்கிலாந்தின் பிரிஸ்டல் எந்திரியறிவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளர்கள் குழு அவர்கள் மனித சிறுநீரில் இருந்து மொபைல் போன் சக்தியை பெற முடியும் என நிரூபித்தது.
சிறுநீரரில், சுமார் 98% நீர், மற்றும் 2% யூரியா கொண்டிருக்கிறது.இது கார்பன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களை உருவாக்குகின்றன.ஒகியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜெரர்டின் போட்டி சமீபத்தில் கிரீன் பாக்ஸ் என்ற ஒரு கருவியை கண்டறிந்தார்.இது நுண்ணுயிர் மின்னாற்பகுப்பு என்று அழைக்கப்படும். இது பூரியா மற்றும் ஹைட்ரஜனை உறிஞ்சும் சாதனம்
இந்த மின்னாற் பகுப்பு யூரியா மற்றும் ஹைட்ரஜனை பிரித்து மின்சார அதிர்வு ஏற்பட வழிவகை செய்கிறது. மேலும் ஹைட்ரஜனை பிடித்து மின்சாரம் தயாரிக்க உதவுகிறது. நைட்ரஜன் செயற்கை உரங்கள் தயாரிக்க உதவுகிறது.ஒரு கட்டிடத்தில் 300 பேர் தங்கி இருந்தால் ஒரு கிரீன் பாக்ஸ் மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கலாம் என போட்டி விவரித்து விளக்கினார்.
சிறு நீர் மூலம் எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்கான ஆராய்ச்சிகள் அதிஒக அலவில் நடைபெற்று வருகிறது என நுண்ணுயிர் மின்வேதியியல் மற்றும் தொழில்நுட்ப சொசைட்டி தலைவர் கோர்னீல் ராபேய் கூறினார் மேலும் இதை குறைந்து செலவில் த்யாரிக்க முடியும். என கூறினார்.
2500 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் ஒரு நுண்ணுயிர் எரிபொருள் செல் அமைப்பு கொண்ட ஒரு கன மீட்டர் பெட்டியை பொருத்தினால். அந்த மக்கள் அனைவரும் சிறு நீரை வீணடிக்காமல் இதில் பயன்படுத்தினால் 500 வாட்ச் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என ராபேய் கணக்கிட்டார்.இந்த ஆற்றல் சுமார் நாள் ஒன்றுக்கு 12 கிலோவாட் மணி ஒப்பானது. அல்லது சிறந்த 50 வாட் பல்ப் சுமார் 240 மணி நேரத்திற்கு எரிவதற்கு சமமானது ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger