மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது இயங்குதளமான வின்டோஸின் பதிப்பு 8.1 இனை ஒக்ரோபர் 17ம் திகதி வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. தற்பொழுது வின்டோஸ் 8 பதிப்பினை வைத்திருப்பவர்களுக்கு இது இலவசமாக கிடைக்கும். ஏனையவர்கள் ஒக்ரோபர் 18ம் திகதி இதனை வாங்கிக் கொள்ள இயலும். வின்டோஸ் பதிப்பு 8 வெளியிடப்பட்டு ஒரு ஆண்டுக்குள்ளாகவே இந்த மேம்படுத்தல் பதிப்பு வெளியிடப்படுவது குறிப்பிடத் தக்கது.
வின்டோஸ் பதிப்பு 8 வெளியிடப்பட்டபோது, பயனாளர்கள் அதில் Start மெனு நீக்கப்பட்டது சம்பந்தமாக பெரிதும் வருத்தம் தெரிவித்திருந்தார்கள். பல பயனாளர்கள் வின்டோஸினை பயன்படுத்தாது கைவிட்டமைக்கும் இது காரணமாக அமைந்தது. இந்த மேம்படுத்தல் பதிப்பு மீளவும் இந்த start மெனுவினை கொண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
மேலும் குறிப்பிடத்தக்கதாக பல மேம்படுத்தல்களோடு Internet Explorer பதிப்பு 11ம் இதனுடன் சேர்ந்து வெளியிடப்படுவது குறிப்பிடத் தக்கது


Twitter for blogger
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக