புதன், 24 ஜூலை, 2013

பேஸ்புக்கில் நண்பனை நீக்கும் வழி

பேஸ்புக்கில் நமக்கென ஓர் அக்கவுண்ட் இருந்தால், நம்மோடு பலர் நண்பர்களாக, அஞ்சல் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். நாம் அவற்றைப் பார்த்து உறுதி செய்துவிட்டால், அவர்கள் பேஸ்புக்கில் இடும் அஞ்சல்கள் நமக்கு தொடர்ந்து வரும்.


இதில் என்ன பிரச்னை என்றால், நாம் அவர்களின் அழைப்பினை ஏற்ற பின்னரே, அவர் இடும் தகவல்கள் நமக்கு ஒப்பானவை அல்ல என்று தெரியவரும். சிலர் தேவையற்ற வகையில் அரசியல் தகவல்களையும், பெண்களின் படங்களையும் இடுவார்கள். இவர் களை உடனே நம் நண்பன் என்ற நிலையிலிருந்து நீக்கவே விரும்புவோம். இதற்கு என்ன செய்யலாம்?

பேஸ்புக் சென்று, குறிப்பிட்ட அந்த நபரின் டைம்லைன் செல்லுங்கள். அந்த நபருக்கான லிங்க்கில் கிளிக் செய்தால் போதும். உங்களுக்கு அவர் குறித்த தளம் கிடைக்கும். இந்த டைம் லைன் பாக்ஸின் மேலாக Friends என ஒரு லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால் கிடைக்கு மெனுவில், Unfriend என்பதில் கிளிக் செய்திடவும்.

இதனைச் செய்தால், அவரின் நண்பர்கள் பட்டியலிலிருந்து உங்கள் பெயர் நீக்கப்படும். மீண்டும் அவருக்கு நண்பன் ஆக விரும்பினால், மீண்டும் ஒரு new friend request கொடுக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger