சனி, 20 ஜூலை, 2013

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளப் பாவனையார்களுக்கு ஓர் எச்சரிக்கை

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை தங்களது கணினிகளில் நிறுவியிருப்பவர்களை உடனடியாக மேம்படுத்தப்பட்ட பதிப்பொன்றுக்கு மாறி விடுமாறு இந்திய அரசின் சைபர் பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
விண்டோஸ் எக்ஸ்ப்பியை ஹேக்கர்கள் இலகுவாக ஊடுருவி மிகப் பெரிய கணினி (சைபர்) தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதே இந்த அறிவுறுத்தலுக்கான காரணமென தெரிய வருகின்றது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான உதவிகளை அடுத்தவருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தி விடுவதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.இதனால் விண்டோஸ் எக்ஸ்பிக்கான பாதுகாப்பு மேம்படுத்தல்கள் எவையும் மைக்ரோசாப்டிடம் இருந்து கிடைக்காமல் போகும் நிலை உருவாகிவிடும்.இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இறுதியாக வெளிவந்த பாதுகாப்பான இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger