வெள்ளி, 26 ஜூலை, 2013

ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவரா நீங்கள் இதையெல்லாம் தவிர்த்திடுங்கள்!

அடிக்கடி தலைவலி வருகிறதா? அப்படியெனில் அது ஒற்றை தலைவலியாகத் தான் இருக்கும். தலைவலியில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஒற்றை தலைவலி. இந்த தலைவலியின் போது தலையின் ஒரு பக்கம் மட்டும் கடுமையான வலிக்கு ஆளாகும். இத்தகைய வலியை சில உணவுகள், சூழ்நிலைகள் ஏற்படுத்தும்


மேலும் ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள் அனைவருக்குமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான செயல்கள் மற்றும் உணவுகளால் ஏற்படும். உதாரணமாக, சிலருக்கு அதிக அளவு சப்தத்தில் பாட்டு இருந்தால், தலைவலி வரும்.

சிலருக்கு சாக்லெட் சாப்பிட்டால் வரும். இப்போது அத்தகைய ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள் மற்றும் செயல்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்களுக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலியை தடுத்துவிடுங்கள்

சீஸ் பால் பொருட்களில் ஒன்றான சீஸ் சாப்பிட்டாலும், சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படும். ஏனெனில் சீஸில் தலைவலியை ஏற்படுத்தும் தைரமைன் என்னும் கெமிக்கல் இருக்கிறது. அதிலும் நாள்பட்ட சீஸ் சாப்பிட்டால், அதில் தைரமைனின் அளவு அதிகரித்து, தலைவலியின் அளவை அதிகரிக்கும்.

ஆல்கஹால் ஆல்கஹால் குடித்தப் பின்னர் பலர் கடுமையான தலைவலியால் அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் ஆல்கஹால் மூளை செல்களில் வறட்சியை ஏற்படுத்தி, ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான சாசேஜ், சலாமி போன்றவற்றால் சிலருக்கு ஒற்றை தலைவலியானது ஏற்படும். ஏனென்றால் இத்தகைய இறைச்சிகளில் தலைவலியை உண்டாக்கும் நைட்ரைட்டுகள் இருக்கிறது.

சோயா பொருட்கள் சோயா பொருட்கள் அனைத்திலுமே ஃபீனைல் தைலமைன் என்னும் பொருள் உள்ளது. எனவே இத்தகைய பொருட்களை சாப்பிட்டப் பின்னர் தலைவலியானது ஏற்பட்டால், இனிமேல் இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

சூரியன் வெயிலிலோ அல்லது அதன் நிழலிலோ இருந்தால், தாங்க முடியாத அளவில் தலைவலி ஏற்படும். எனவே அதிகம் வெயிலில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது.

நட்ஸ் நட்ஸிலும் ஃபீனைல் தைலமைன் மற்றும் தைரமைன் போன்ற கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வேர்க்கடலையில் அதிகம் உள்ளது. அதனால் தான் பலருக்கு நட்ஸ் அழற்சியை ஏற்படுத்துகிறது.

ஆப்பிள் சொன்னால் நம்ப முடியாது தான். ஆனால் பழங்களில் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆப்பிள், பீச் போன்றவற்றை சாப்பிட்டாலும் தலைவலி ஏற்படும். ஏனெனில் சிவப்பு நிறத் தோலில் டேனின் இருப்பதால், அவை மிகக் கொடிய தலைவலியை ஏற்படுத்தும். எனவே அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆப்பிளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

உலர் பழங்கள் உலர் பழங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஆனால் அதே சமயம் அதில் சல்பைட் என்னும் தலைவலியை ஏற்படுத்தும் பொருளும் உள்ளது. அதிலும் சிலருக்கு மட்டுமே இத்தகைய உணர்வு ஏற்படும்.

நூடுல்ஸ் நூடுல்ஸில் அஜினோமோட்டோ என்னும் உணவுக்கு சுவை அளிக்கக்கூடிய பொருள் உள்ளது. இது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த அஜினோமோட்டோ நூடுல்ஸில் அதிகம் இருக்கும்.

சப்தமான பாட்டு சிலருக்கு பாட்டு கேட்கும் போது அளவுக்கு அதிகமான சப்தம் இருந்தால், தலைவலி ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger