திங்கள், 15 ஜூலை, 2013

களைச்செடிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான எளிய வழிகள்

தோட்டத்தில் செடிகளை கஷ்டப்பட்டு நட்டு வைத்து வளர்த்து வருவோம். ஆனால் சில நேரங்களில் செடியின் வளர்ச்சியானது தடைப்டும். அதற்கு முக்கிய காரணம் தோட்டத்தில் களைச்செடிகள் வளர்ச்சியடைவது
தான். களைச்செடிகள் என்பது தோட்டத்தில் வளரும் தேவையில்லாத செடிகள். இவை அதிக வளர்ச்சியுடையவை. அதிலும் இந்த களைச்செடிகளுக்கு எந்த ஒரு விதைகளோ தேவையில்லை. தானாகவே தோட்டத்தில் உள்ள இடங்களில் வளரக்கூடியது. இவை தோட்டத்தில் அதிகம் இருந்தால், செடிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதோடு, செடிகளுக்கு போட்டும் அனைத்து சத்துக்களையும் களைச்செடிகள் உறிஞ்சிக் கொண்டு வளர ஆரம்பிக்கும். எனவே செடிகள் நன்கு ஆரோக்கியமாக வளர வேண்டுமென்று ஆசைப்பட்டால், முதலில் களைச்செடிகளை தோட்டத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்கான சில எளிய வழிகளைத் தான் கீழே கொடுத்துள்ளோம். அதை முயற்சித்தால், களைச்செடிகளின் வளர்ச்சியை தடை செய்துவிடலாம். களைச்செடிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான சில எளிய வழிகள்!!! * தோட்டம் சிறியதாக இருந்து, களைச்செடிகள் அதிகம் இருந்தால், அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேரோடு பிடுங்கிவிட்டால், களைச்செடிகள் வளராமல் தடுக்கலாம். * இல்லையெனில் தோட்டக்கருவிகளைக் கொண்டு கொத்திவிட்டு, பின் அவற்றை அப்புறப்படுத்தலாம். * கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு, களைச்செடிகளை அழிக்க நினைத்தால், களைகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த முறையில் தோட்டமானது பெரியதாக இருந்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். மேலும், உயிரியல் களைக் கட்டுப்பாடு ஒரு நீண்ட கால முறையாகும். * தற்போது மார்கெட்டில் பல ஆர்கானிக் களைக்கொல்லிகள் கிடைக்கின்றன. அதில் ஆர்கானிக் சோப்பு மற்றும் செடி எண்ணெய் போன்றவை மிகவும் சிறந்த களைக்கொல்லிகளாகும். அதிலும் செரிவூட்டப்பட்ட வினிகரைப் பயன்படுத்தினால், இன்னும் நல்லப் பயனைப் பெறலாம். * குறிப்பாக மேற்கூறியவற்றையெல்லாம் மேற்கொண்டால் மட்டும் போதாது, அவ்வப்போது களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மண் மற்றும் சாகுபடியை கண்காணிப்பதன் மூலம், வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதோடு, வளர்ச்சியை முற்றிலும் தடுக்கவும் முடியும். அதிலும் களைச்செடிகள் வளர ஆரம்பிக்கும் முன்பே அதனை பிடுங்கிப் போட்டால், அது பரவுவதைத் தவிர்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger