வியாழன், 4 ஜூலை, 2013

கூகுளின் புதிய சாட் வசதி!




Gmail Chat, Google Talk, Google+ chat, Google Drive Chat ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து Babel என்ற பெயரில் கூகுள் புதிய சாட் வசதியை ‘Hangouts’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த Hangouts வசதியை ஐந்து வழிகளில் பயன்படுத்தலாம்.
ஜிமெயில் சாட்
கூகுள் ப்ளஸ் சாட்
க்ரோம் நீட்சி (extension)
ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் (முன்பு Google Talk)
ஐஓஎஸ் அப்ளிகேசன்
இதில் ஜிமெயிலில் மட்டும் இன்னும் சில தினங்களில் அனைவருக்கும் இந்த வசதி வந்துவிடும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. ஆனால் நீங்கள் இப்போதே ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.

ஜிமெயில் சாட் பாக்ஸில் தெரியும் உங்கள் படத்தை க்ளிக் செய்தால் பல தேர்வுகள் காட்டும். அதில் Try, the new hangouts என்பதை க்ளிக் செய்தால் போதும். புதிய சாட் பாக்ஸை பயன்படுத்தலாம்.

Hangouts வசதிகள்:

சாட்டில் படங்களையும், அட்டகாசமான புதிய உணர்சித்திரங்களையும் (Emoticons) அனுப்பலாம். பத்து நபர்கள் வரை க்ரூப் சாட் மற்றும் க்ரூப் வீடியோ சாட் செய்யலாம். கணினியில் சாட் செய்ய தொடங்கி பிறகு ஆண்ட்ராய்ட், ஆப்பிள் சாதனங்களில் சாட்டிங்கை தொடரலாம். இதில் வருத்தமான செய்தி என்னவென்றால் நான் எப்போதும் பயன்படுத்தும் வசதி இல்லை. Hangouts-ல் invisible வசதி கிடையாது. இதில் எஸ்எம்எஸ் வசதியும் விரைவில் வரவிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger