திங்கள், 22 ஜூலை, 2013

துள்ளிக்குதித்து ஓடி உறக்கத்தை விட்டு எழுப்பும் அலார கடிகாரம்

ஆழ்ந்த தூக்­கத்தில் இருப்­ப­வர்­களை எழுப்­பு­வ­தற்­காக துள்­ளிக்­கு­தித்து அறை­யி­லி­ருந்து ஓடும் ரோபோ அலார கடி­கா­ர­மொன்­றினை இங்­கி­லாந்தின் பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரொ­ருவர் கண்­டு­பி­டித்­துள்ளார்.
உறக்­கத்­தி­லி­ருந்து எழுந்து பல்­க­லை­க­ழக விரி­வு­ரை­க­ளுக்கு குறித்த நேரத்­திற்கு செல்­வ­தற்கு தடு­மா­றிய மாணவன் ஒரு­வரே இந்த சாத­னத்தைக் கண்­டு­பி­டித்­துள்ளார்.
“கிளொக்கி” எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள 2 டயர்­களைக் கொண்ட இந்த ரோபட்டிக் கடி ­கா­ர­மா­னது, 3 அடி உயரம் வரை பாய்ந்து கார்பட் தரை மற்றும் மரத் தரை உள்ள அறையில் அங்கும் இங்கும் ஓடிச் செல்லக் கூடி­யது.
ஒரு முறை மட்­டுமே ஸ்னஸ் செய்ய அனு­ம­திக்கும் இந்த கடி­கா­ரத்தை பிடித்து அலார்மை நிறுத்தும் வரை பாரிய சத்­தத்­துடன் அறை முழு­வதும் சுற்றி ஓட ஆடம்­பித்­து­விடும். இதனால் ஆழ்ந்த தூக்­கத்தில் இருப்­ப­வர்கள் விரட்டிப் பிடித்து கடி­கா­ரத்தின் சத்­தத்தை நிறுத்­தி­யே­யாக வேண்­டிய கட்­டா­யத்தில் எழும்­பி­வி­டு­வார்கள்.
நிச்­ச­மாக தூக்­கத்­தி­லி­ருந்து எழுப்­பி­விடும் இந்த கடி­கா­ரத்தின் பய­னர்­க­ளி­ட­மி­ருந்து நேர்மறையான கருத்துக்கள் வந்துகொண்டிருப்பதாக இக்கடி கார விற்பனை பணிப்பா ளரான இயன் ஒல்ஸன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger