ஞாயிறு, 21 ஜூலை, 2013

பூமியின் நேரமானது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகரிக்கின்றது

பூமியின், துருவங்களில் ஏற்படும் மாறுபாட்டால், ஒரு நாளுக்கான நேரம், ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதிகரித்து வருவதாக, பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். பிரிட்டனின், லிவர்பூல் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பூமியின் துருவங்களில் ஏற்படும்
நிகழ்வுகள் மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். 1962 முதல், 2010 வரை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஆறு ஆண்டு களுக்கு ஒரு முறை, பூமியின் ஒரு நாளுக்கான நேரம் அதிகரித்து வருவ தாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பூமி, அதன் சுற்றுப் பாதையில் சுற்றி வரும் போது, தன்னைத் தானே சுற்றுவது வழக்கம். இவ்வாறு, தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள, தற்போது, 24 மணி நேரம் ஆகிறது. இது, 3,000 லட்சம் ஆண்டுகளுக்கு முன், 21 மணி நேரமாக இருந்தது.

ஓராண்டுக்கு, தற்போது, 365 நாட்கள் இருக்கும் நிலையில், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், 450 நாட்களாக இருந்தது. இந்த மாற்றம், புவியின் துருவங்களிலும், மத்திய பகுதிகளிலும் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படுகிறது. இதன் படி, ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பூமியின் ஒரு நாளுக்கான நேரம், மெல்ல அதிகரித்து வந்துள்ளது. இந்த மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ் வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger