ஞாயிறு, 23 ஜூன், 2013

பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இணையதளங்கள்

பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இணையதளங்கள்இன்று இணையம் என்பது ஆண், பெண் என அனைவரும் பயன்படுத்தும் பொருளாகிவிட்டது.
அதிலும்,இந்திய பெண்களில் சுமார் 6 கோடி பேர் நாள்தோறும் இணைய தளங்களில் தொடர்பு வைத்து வருகின்றனர் என இணையதள தேடு இயந்திரமான ‘கூகுள்' தெரிவித்துள்ளது.

அதில் சரும பராமரிப்பு பற்றி அறிந்துக்கொள்ள 72 சதவீதம் பெண்களும், குழந்தை பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்பு தொடர்பான தகவல்களை அறிய முறையே 69 மற்றும் 65 சதவீத இந்திய பெண்கள் அக்கறை காட்டுவதாகவும் இந்த ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.
ஆயிரம் இந்திய பெண்களிடம் அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் 15-34 வயதுக்குட்பட்ட 2 கோடியே 40 லட்சம் பெண்கள் அன்றாடம் இணைய தளங்களில் தொடர்பு வைத்து வருகின்றனர்.
வீடு, அலுவலகம் ஆகியவற்றில் இணையதள இணைப்பு, செல்போன் மூலம் இணையதள தொடர்பு ஆகியவை முன்னேறி வருவதால் இந்திய பெண்களில் 6 கோடி பேர் இணைய தளங்களை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்துக் கொள்கின்றனர்.
பெண்கள் தேடும் தகவல்களில் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் முதலிடத்தில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, உணவு, பானங்கள், குழந்தை பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, சரும பராமரிப்பு போன்ற தகவல்களை பெண்கள் தேடுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger