வியாழன், 27 ஜூன், 2013

சவுதி வார இறுதி நாட்கள் மாறுகின்றன: இனி வெள்ளி-சனி வார இறுதி நாட்கள்! - மன்னர் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்

சவுதி அரேபியா தமது வார இறுதி நாட்களை வெள்ளி-சனி என்று மாற்றுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து சவுதியில் வேலைநாட்கள், ஞாயிறு-வியாழன் என்று மாறப்போகின்றது.



இதுவரை காலமும் சவுதியில் வார இறுதி நாட்கள், வியாழன்-வெள்ளி என்றே இருந்தன. அநேக அரபு நாடுகளிலும் அவ்வாறுதான் உள்ளன. கடந்த மாதம் ஓமன் அரசு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளை வார இறுதி நாட்களாக அறிவித்தது. தற்போது, சவுதியும் அப்படியே மாற்றிக் கொள்ளப் போகின்றது.

சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ்அல் சவுத், இந்த அறிவிப்பை செய்துள்ளார்.(?) “உலக வேலை வாரத்தில் இருந்து, சவுதியின் வேலை வாரம் இதுவரை பெரிதும் மாறுபட்டு இருந்ததால், பல பொருளாதார வாய்ப்புகள் இழக்கப்பட்டன. அதையடுத்து, உலக வேலை வாரத்துக்கு மிக நெருக்கமாக சவுதி வேலை வாரத்தையும் கொண்டுவர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனவும், மன்னர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து, சவுதி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், சவுதி மத்திய வங்கி, மற்றும் பிற நிதி நிறுவனங்கள் இம்மாதம் 29-ம் தேதி இந்த மாற்றத்தை கொண்டுவருகின்றன. அரசு அமைச்சுக்களும் அதே தினத்தில் தமது காலண்டர்களை மாற்றுகின்றன. பள்ளிகளில் மட்டும் அடுத்த கல்வியாண்டில் இந்த மாற்றம் கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மன்னர் அப்துல்லாஹ் விடுத்தார் என சவுத அரேபிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் மன்னர் வெளிப்படையாக தொலைக்காட்சியிலோ வேறு ஊடகங்களிளோ தோன்றி இதனை விடுக்கவில்லை. மன்னர் உயிருடன் இருக்கிறார் என்று தோற்றப்பாட்டை உருவாக்க இவ்வாறாக “மன்னர் அறிவித்தார்” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனவா? என்பதற்கு விடை என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger