திங்கள், 20 மே, 2013

பேஸ்புக் வழி தண்டனை


பெற்றோர்களை எதிர்த்து பேசும் பிள்ளைகள் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அதே போல அப்பா அம்மாவுக்கு கீழ் படியாத பிள்ளைகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.இல்லை என்றால் பேஸ்புக் தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.


அதென்ன பேஸ்புக் தண்டனை?

பிள்ளைகளுக்கு புரியும் மொழியிலேயே பேச வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் புதுமையான தண்டனை!

பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல் இருந்தாலோ அல்லது தவறு செய்தாலோ ஒரு சில பெற்றோர்கள் இப்போது கோபம் கொள்வதில்லை;அட்வைஸ் செய்வதில்லை.மாறாக பேஸ்புக் வழியே தண்டனை வழங்குகின்றனர்.

இப்படி தான் அமெரிக்காவின் டெனிஸ் அபோட் என்னும் பெண்மணி தனது 13 வயது மகள் அவா மற்றவர்கள் முன் தன்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அதிருப்தியும் ஆவேசமும் அடைந்தார்.

வழக்கமான அம்மாவாக இருந்தால் மகளை அந்த இடத்திலேயே நாசுகக்காக கண்டித்திருப்பார்,அல்லது விட்டிற்கு வந்தவுடன் எல்லோரிடமும் பணிவுடன் நடந்து கொள்வதன் அவசியம் குறித்து அன்பாகவோ ஆவேசமாகவோ எடுத்து சொல்லியிருப்பார்.

ஆனால் டெனிஸ் அபோட்டோ இப்படி எல்லாம் செய்யவில்லை!மாறாக மகளின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று அதில் இருந்த புகைப்படத்தை நீக்கி விட்டு அந்த இடத்தில் வாய் மீது பெருக்கல் குறி இடப்பட்டிருக்கும் சிறுமியின் படத்தை இடம் பெறச்செய்திருந்தார்.அதோடு அந்த படத்தின் கீழ் ‘வாயை மூடிக்கொண்டிருப்பது எப்படி என்பது எனக்கு தெரியவில்லை,நான் பேஸ்புக் அல்லது செல்போனை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.தயவு செய்து ஏன் என்று கேளுங்கள்!ஏன் என்றால் ஒவ்வொருவருக்கும் நான் சரியாக பதில் சொல்ல வேண்டும் என்று என்பது என் அம்மாவின் உத்தரவு’ என்னும் வாசகமும் இடம் பெற்ச்செய்திருந்தார்.

தனியே அழைத்து அட்வைஸ் செய்வதை விட மகளின் நண்பர்கள் அனைவரும் பார்க்கும் படி இப்படி பேஸ்புக் மூலம் செய்த தவற்றை எடுத்து சொன்னால் தான் பேஸ்புக்கே கதியென இருக்கும் மகளுக்கு புரியும் என நினைத்தே அவர் இப்படி உலகமே பார்க்க கூடிய வகையில் பேஸ்புக் மூலம் பகிரங்கமாக தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

இப்படி ஏதாவது செய்தால் தான் மற்றவர்கள் முன்னால் மோசமாக நடந்து கொண்டால் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளக்கூடிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் நினைத்தார்.

மகள் தான் செய்த தவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் இவ்வாறு செய்தாலும் அவரது இந்த செயல் இணைய உலகில் எதிர்பாராத பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.இப்படி பகிரங்கமாக தண்டனை தருவது சரியா என்று கேள்வி எழுப்பினர்.ஆனால் பெரும்பாலனோர் இது சரியான தண்டனையே என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இணையம் மூலம் இத்தனை பரபரப்பு ஏற்படும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் டெனிஸ் தான் செய்தது தவறு இல்லை என்றே கூறுகிறார்.மகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என்று அவர் எந்த வித வருத்தமும் இல்லாமல் கூறுகிறார்.

பேஸ்புக் வழியிலான இந்த பகிரங்க தண்டனைக்கு இலக்கான அவரது மகள் அவாவும் இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.தவறு செய்தால் கண்டிப்பது என அம்மாவின் வழக்கம் இப்போதும் அதை தான் செய்திருக்கிறார் என்று அந்த பெண் கூலாக சொல்லியிருக்கிறாள்.

ஆனால் சமூக ஊடக போக்கை கவனிக்கும் நிபுணர்கள் தான் கொஞ்சம் கவலை அடைந்துள்ளனர்.காரணம் இப்படி பகிரங்க தண்டனை தரும் போக்கு அதிகரித்து வருவது தான்.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரை சேர்ந்த மான்ட்ரயல் ஒயிட் என்னும் தந்தை தனது மகள் வீடில் திருடும் பழக்கம் கொண்டிருந்ததால் ,நான் திருடி என்று எழுதிய அட்டையை கையில் பிடித்த படி பள்ளி முன் நிறக் வைத்து விட்டார்.

அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன் டாமி ஜோர்டன் என்னும் அமெரிக்க அப்பா மகல் பேஸ்புக்கில் தனக்கெதிராக கருத்து தெரிவித்ததை அடுத்து கஆவேசமாகி அவளது லேப்டாப்பை துப்பாக்கியால சுட்டுத்தள்ளி அந்த காட்சியை யூடியுப்பிலும் பதிவேற்றியது நினைவிருக்கலாம்.

பெற்றோர்களின் இந்த பேஸ்புக் கால கோபம் நல்லதா,கெட்டதா தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger